தமிழ் பிக் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் சில மாடல்கள் போட்டியாளர்களாக பங்கேற்பது தெரிந்த விஷயம். அப்படி ஆரவ், தர்ஷன் போன்றவர்களை தொடர்ந்து பிக் பாஸ் நான்காவது சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் பாலாவின் 27வது பிறந்தநாள் இன்று. ஹேப்பி பர்த்டே பாலா !!!


 



சென்னை பையன் :


பாலாஜி முருகதாஸ் மாடல் உலகில் மிகவும் பிரபலம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். தேனி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பாலாஜி முருகதாஸ் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். பிரபலமான எஸ்.ஆர்.எம் கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான பாலா ஒரு டிஸ்ட்ரிக்ட் லெவல் கபடி பிளேயராகவும் இருந்துள்ளார். மாடலிங் மீது இருந்த ஆர்வத்தால் தனது இளம் வயதிலேயே மாடலிங் துறையோடு சேர்த்து பாடி பில்டிங் செய்து சிக்ஸ் பேக்ஸ்ஸுடன் வலம் வந்துள்ளார். அதனை தொடர்ந்து பல மாடலிங் போட்டிகளில் டைட்டில் வின்னராக கலக்கி இந்தியாவிற்கு புகழ் சேர்த்தார். போத்தீஸ் உட்பட பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். 


 






 


சினிமா வாய்ப்பு :


மாடலிங்கில் மிகவும் பிரபலமாக இருந்த பாலாவிற்கு சினிமா வாய்ப்பு கொடுத்தது தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ். தான் நடித்து வந்த டைசன் திரைப்படத்தில் ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தில் பாலாவை நடிக்க வைத்தார். அதனை தொடர்ந்து ஜீ 5ல் வெளியான வெப் சீரிஸ் 'கரோலின் காமாட்சி' எனும் தொடரில் நடிகை மீனா உடன் இணைந்து விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் 4 சீனில் பங்கேற்று ரன்னர் அப்பாக வெற்றி பெற்ற பாலாஜி முருகதாஸ் அதனை தொடர்ந்து ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.  


 






ஹீரோவான பாலாஜி :


பாலாஜி முருகதாஸ் ஒரு பிரபலமான மாடல் மட்டுமின்றி ஒரு வெற்றிகரமான பிஸ்னஸ்மேன் என்பது பலரும் அறியாத விஷயம். தற்போது லிப்ரா நிறுவனத்தின் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் 'மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்' எனும் மலையாள ரீ மேக் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு பாலாஜி முருகதாஸ் திரைவாழ்க்கையில் ஒரு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும். ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே பாலாஜி முருகதாஸ்.