தமிழ்நாடு:



  • திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

  • போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. 

  • தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 195-வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

  • முன்னாள் அமைச்சர் சொத்துக்களை விற்ககூடும் என்பதால் தான் முடக்கினோம் என வருமானவரித்துறை உயர்நீதிமன்றத்தில் விளக்கம். 

  • திமுக அரசைக் கண்டித்து இன்று, கோவையில்  முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில்  அதிமுக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. 

  • கோடநாடு கொலை வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது

  • தமிழ்நாட்டில் முதல் முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 40 நாடுகள் பங்கேற்க உள்ளன. 

  • மின் திருத்த மசோதாவில் தமிழக அரசின் கொள்கைக்கு எதிரான 12 பிரிவுகளை நீக்க வேண்டும் : நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திமுக வலியுறுத்தல் 


இந்தியா:



  • 89 தொகுதிகளீல் முதற்கட்ட தேர்தல்: குஜராத்தில் 60% வாக்குப்பதிவு

  • காங்கிரஸ் தலைவர்களிடையே என்னை திட்டுவதில் போட்டி - பிரதமர் மோடி

  • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

  • விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி கோபுரங்கள் அமைக்க தடை விதித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. 

  • இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 33 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நடத்துகின்றனர் என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

  • மும்பை- நாக்பூர் விரைவு சாலை: வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.


உலகம்: 



  • ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா - தலைவர்கள் வாழ்த்து

  • 44 ஆயிரம் இந்தியர்களின் ட்விட்டர் கணக்குகள் ரத்து! - மஸ்க்கின் மெகா நடவடிக்கைக்குக் குவியும் பாராட்டு

  • அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்பதே அப்பாவின் ஆசை - பின்லேடன் மகன் பேட்டி

  • ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு


விளையாட்டு:



  • அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலப்பட்டியலில், அதிகளவில் ஆஸ்திரேலிய வீரர்களே முன்பதிவு செய்துள்ளனர்.

  • இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்து உலகசாதனை படைத்துள்ளது.

  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 598 ரன் சேர்த்து 'டிக்ளேர்' செய்துள்ளது. 


உலகக் கோப்பை கால்பந்து தொடர்:



  • ஸ்பெயினை வீழ்த்து 2வது சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்.

  • கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஜெர்மனி அணி.