அமீர் மற்றும் பாவனி:


பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி.  இந்த போட்டியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த நடன இயக்குனர் அமீர், ஏற்கனவே திருமணம்  ஆகி கணவரை இழந்த, பாவனி ரெட்டியை காதலிக்க துவங்கினார். தற்போது இவர்களின் காதல் திருமணம் வரை வந்துள்ளது.


தழிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனி ரெட்டி. குறிப்பாக கௌரவம், வஜ்ரம், 465, மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில், துணிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியல் மூலமாக பிரபலமான நடிகை பாவனி. இது தவிர பாசமலர், ரெட்டி வால் குருவி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.




Pavani And Amir Wedding: 3  வருட காதல் வாழ்க்கை; ஒருவழியாக திருமண தேதியை அறிவித்த அமீர் - பாவனி ஜோடி!


பிரதீப் குமாருடன் திருமணம்:


பாசமலர் தொடரில் நடிக்க தொடங்கிய போது தான், தெலுங்கு நடிகர் பிரதீப் குமாருடன் டேட்டிங்கில் இருந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடம் டேட்டிங்கிற்கு பிறகு 2016 நவம்பரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பிறகு தான் 2017 பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பிரதீப் குமார் மற்றும் பாவனி இருவரும் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர் ஆனால், 3 மாதத்திற்குள்ளாக பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அதன் பிறகு அந்த துயர சம்பவத்திலிருந்து மீண்டு வந்த பாவனி சினிமா மற்றும் சீரியல்களில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் தான் டான்ஸரும், நடன இயக்குநருமான அமீரும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலமாக இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதன் பிறகு இருவரும் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றியும் பெற்றனர். 





தற்போது பாவனி வெப் சீரிஸீல் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பாவனி மற்றும் அமீர் இருவரும் லிவிங் டூகெதராக வாழ்ந்து வந்த நிலையில் இப்போது தங்களது காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆண்டு கால காதல் வாழ்க்கைக்கு பிறகு இப்போது திருமண தேதியை அறிவித்திருக்கிறார்கள்.


திருமண தேதி


அதன்படி காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வரும் ஏப்ரல் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.