WPL 2025 RCB vs GG: ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது போல மகளிர் பிரிமியர் லீக் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான மகளிர் பிரிமியர் லீக் பிப்ரவரி 14ம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 


தொடங்கியது மகளிர் பிரிமியர் லீக்:


இந்த நிலையில் மகளிர் பிரிமியர் லீக் தொடர் இன்று குஜராத் மாநிலம் வதோராவில் தொடங்கியது. வதோராவில் உள்ள கோடம்பி மைதானத்தில் இந்த போட்டி பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.  இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது.


ப்ளேயிங் லெவன்:


ஆர்சிபி அணியில் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா தலைமையில் டேனியல் வ்யாட், எல்லீஸ் பெர்ரி, ராக்வி, ரிச்சா கோஷ், கனிகா அகுஜா, ஜார்ஜியா வாரெம், கிம் கார்த், ப்ரேமா ராவத், ஜோஷிதா, ரேணுகா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். 


குஜராத் அணிக்கு கேப்டனாக பிரபல வீராங்கனை பெத் மூனி களமிறங்கியுள்ளார். அவரது தலைமையில் லாரா, ஹேமலதா, ஆஷ்லே கார்ட்னெர், தியோந்த்ரா டோட்டின், ஹர்லீன் தியோல், சிம்ரன், தனுஜா, சயாலி, ப்ரியா, காஷ்வி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். 


வெற்றிக்காக தீவிரம்:


இந்த போட்டியில் வெற்றியுடன் தொடங்க இரு அணி வீராங்கனைகளும் மும்முரமாக களமிறங்கியுள்ளனர். ஆர்சிபி அணிக்கு பலமாக கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, எல்லீஸ் பெர்ரி, டேனியல் வ்யாட், ரிச்சா கோஷ், ரேணுகா சிங் உள்ளனர். 
அதேபோல குஜராத் அணியில் பெத் மூனி, லாரா, ஹேமலதா, கார்ட்னர், ஹர்லீன் முக்கிய வீராங்கனைகளாக உள்ளனர். 


ஆர்சிபி- குஜராத் அணிகள் மோதும் இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று இரு அணி வீராங்கனைகளும் களமறிங்கியுள்ளனர்.