சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'.  இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


சமந்தா ஆடிய குத்தாட்டம்: 


குறிப்பாக இந்தப் படத்தில் ‘ஓ சொல்றியா பாடலுக்கு சமந்தா ஆடிய குத்தாட்டாம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் இடம் பெற்ற வசனங்களும் பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமான நிலையில், பலரும் படத்தில் இடம்பெற்ற சாமி சாமி, ஸ்ரீவள்ளி, ஓ சொல்றியா பாடல்களுக்கு நடனமாடியும், வசனங்களையும் பேசியும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.


டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா 


அந்த வரிசையில் பிரபல கிரிக்கெட் வீரர்களான டேவிட் வார்னரும் சுரேஷ் ரெய்னாவும் அடங்குவர். 


 






 






தொடர்ந்து பல பிரபலங்கள் புஷ்பா தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ஷிவானியும்  ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது வரை இந்த வீடியோவை 70,000 த்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஷிவானி கமல் நடிப்பில் வெளியாக உள்ள விக்ரம் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.