பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் புதியதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அனிதா சம்பத், “வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிகப் பெரிய கனவு. வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா.. பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு. ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாவுக்கும் அதே தான். இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு.
புது வீடு வாங்கிய அனிதா சம்பத்
நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம். “நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும். இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன். இதை படிக்கிற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்குவீங்க. எங்க சார்பா அதற்கான வாழ்த்துகள்.” என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த இன்ஸ்டாகிராம்வாசிகள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் பிரபலம்
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை அனிதா சம்பத். அதனைத்தொடர்ந்து அவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 யில் பங்கேற்றார். இதனையடுத்து அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.