பிரபல நடிகையான நமீதா கர்ப்பமடைந்துள்ளார். 


இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டிருக்கும் நமீதா, “வாழ்வின் புதிய அங்கம் தொடங்குகிறது. நான் மாறியிருக்கிறேன். ஏதோ ஒன்று எனக்குள் மென்னையாக மாறியிருக்கிறது. சூரிய ஒளியின் வெளிச்சம் என் மீது பிரகாசிக்கும் போது, புதிய வாழ்கை, புதிய தொடக்கம் என்னை அழைக்கிறது. நான் விரும்பியதெல்லாம் நீ தான். உனக்காக நான் நீண்ட காலமாக பிரார்த்தித்து வந்திருக்கிறேன். உன்னுடைய மென்மையாக உதைகள், படப்படப்பு என எல்லாவற்றையும் என்னால் உணரமுடிகிறது. இதுவரை எப்போதும் இல்லாத என்னை நீ உருவாக்கி இருக்கிறாய்”என்று அவர் பதிவிட்டுள்ளார். 


 







நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘ எங்கள் அண்ணா’ படத்தில் நடிகையாக அறிமுகமானார் நமீதா. தொடர்ந்து சத்யராஜ், சரத்குமார், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த நமீதா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர்உடல் எடை கூடியதால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனால் உடல் எடையை குறைக்க பல பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவருக்கு முன்பு இருந்த மார்க்கெட் கை கூட வில்லை. அவ்வப்போது சில படங்களில் அங்குமிங்குமாக வந்து போய் கொண்டிருந்த நமீதா பிக்பாஸ் சீசன்  1 இல் போட்டியாளராக பங்கேற்றார். அப்போது பேசிய நமீதா, மன அழுத்ததால் உடல் எடை கூடியதாக கூறினார். இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர செளத்ரியை திருமணம் செய்து கொண்ட அவர் நீண்ட காலமாக குழந்தைக்கு முயற்சி செய்து வந்த நிலையில் தற்போது கர்ப்பமடைந்துள்ளார்.