பிரபல சமூக வலைத்தள பிரபலம் அனிதா சம்பத் நேர்காணல் ஒன்றில் தன் அப்பா இறந்த அன்று நடந்த சம்பவம் பற்றி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 


செய்தி வாசிப்பாளராக தமிழ்நாடு மக்களிடம் பிரபலமான அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலமானார். இவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தன் அப்பா இறந்த அன்று என்ன நடந்தது என்பதை பற்றி விவரித்துள்ளார். 


அதில், “நான் தான் இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டமில்லாத ஒரு மகள் என அடிக்கடி எழுதுவேன். அப்பா இறந்த நேரத்தில் தான் இப்படி எழுதினேன். யார் என்ன சொன்னாலும், பெற்றோர்களின் இழப்புக்கான ஆறுதல் என்பது இந்த உலகத்திலேயே இல்லை. எப்படி கவலைப்படாமல், அழாமல் இருக்க முடியும். அவர்களுக்காக நிறைய விஷயங்கள் பண்ண ஆசைப்பட்டு இன்னைக்கு அவங்க இல்லாமல் நாம மட்டும் என்ஜாய் பண்ணா நல்லாவா இருக்கும்?. அதை ஏத்துக்கவே முடியாது.


நான் பிக்பாஸ் வீட்டில் 85 நாட்கள் இருந்தேன். அதில் 18 பேர் கிட்ட இருந்தார்கள். ஆனால் அதில் 4,5 பேர் மட்டும் தான் அப்பா இறந்ததுக்கு வந்தார்கள். நான் என்னுடன் இருந்தவர்களுக்கு இப்படி நடந்திருந்தால் கண்டிப்பாக போயிருப்பேன். எல்லாருமே அந்நிகழ்ச்சி முடிந்தது பப், மற்றவர்களின் நிகழ்ச்சிகளுக்கு போனார்கள். ஆனால் 4 பேர் மட்டும் தான் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். 


நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு உள்ளே இருந்தவர்களிடம் யார் யார் வெளிநாடு சென்றிருக்கிறீர்கள் என கேட்டு அதற்கு எவ்வளவு செலவாகும் என கேட்பேன். அப்பாவை உலகம் முழுவதும் சுற்றுலா கூப்பிட்டு செல்ல வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. நான் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிச்சிட்டு வந்த மறுநாள் அப்பா இறந்ததாக தம்பி போன் பண்ணி சொன்னான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு கேக் வெட்டி கணவர் பிரபா உள்ளிட்ட குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அந்த வீடியோவில் கூட நான் அப்பா எங்கே என்று தான் கேட்டிருப்பேன். 


அவர் நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடக்கூடாது என சொல்லி ஷீரடி போய்விட்டதாக சொன்னார்கள். அது டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது. மறுநாள் 29ஆம் தேதி காலை 8 மணிக்கு போன் வருகிறது. அம்மாவுக்கு அப்போது குடலிறக்கம் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது. அவர் போனை எடுத்து பேசிக்கொண்டே ஆபரேஷன் பண்ண இடத்தில் அடித்துக் கொண்டே அழுகிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் தம்பியிடம் நான் பேசினேன்.


அவன் விஷயத்தை சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் ஷீரடி போய் விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஆந்திரா அருகில் தான் அந்த நிகழ்வு நடந்துள்ளது. அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வந்த காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. 


அப்பா பத்திரிக்கை துறையில் பிரபலமான நபர் என்பதால் சார்ந்தோருக்கு அவர் இறந்தது பற்றி தகவல் அனுப்பினேன். அது மிகப்பெரிய அளவில் பிரச்சினையானது. நான் பப்ளிசிட்டிக்காக பண்ணியதாக சொன்னதை கேட்டு வேதனைப்பட்டேன். எல்லாரும் திட்டி வைத்திருந்தார்கள். கிட்டதட்ட 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விட்டு வந்த பிறகு அப்பாவிடம் பேச முடியாத சூழல் எனக்கு எப்படி இருக்கும்? - பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தை கொண்டு நான் கண்ட கனவு எல்லாம் உடைந்து விட்டது. நெகட்டிவாக கமெண்டுகளை கண்டு ஒரு பெண்ணாக என்னால் தாங்கிக்க முடியும்? . ஒரு பெண்ணோட அப்பா இறந்ததை கண்டு சந்தோஷப்படுற ஒருவரின் ரசிகனாய் இருப்பவர்களை நான் எவ்வளவோ மேலானவள் தானே?” என தெரிவித்துள்ளார்.