பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில் அவரது சம்பளம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் ரொம்ப மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் எலிமினேஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரின் பிக்பாஸ் சம்பளம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த தகவல்களின் அடிப்படையில், மொத்தம் 14 லட்சம் ரூபாய் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் என்ற வீதம் மொத்தமாக ஏழு வாரத்திற்கு ரூபாய் 14 லட்சம் ரூபாய் ராபர்ட் மாஸ்டருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மொத்தம் 21 போட்டியாளர்களில் பிக்பாஸ் வீட்டில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். அஸிம்,விக்ரமன், அமுதவாணன், ராம், கதிர், மணிகண்டன், ஏடிகே, ரச்சிதா,மைனா,குயின்ஸி, தனலட்சுமி, ஆயிஷா, ஷிவின் என 13 போட்டியாளர்கள் வெற்றி இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே பிக்பாஸ் வீட்டிற்குள் 21 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்தவர், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். நாள் ஒன்றில் இருந்தே, அனைவரிடத்திலும் மிகவும் அன்பாக பழகி வந்தார். டார்லிங் என்று அனைவரையும் அழைத்து அனைவருடனும் நட்பு பாராட்டினார். மேலும் வீட்டிற்குள் வந்த இரண்டாவது நாளே சக போட்டியாளரான ரச்சிதாவுடன் நெருங்கி பழக தொடங்கினார். ரச்சிதாவிடம் தானாக சென்று பேசுவது, அவர் செல்லும் இடமெல்லாம் செல்வது, அவரைப் பற்றி மற்றவர்களிடம் விசாரிப்பது என சுற்றித்திரிந்த இவர், இதற்காக பல விமர்சனங்களையும் ஏற்றார். இதன் விளைவாக விளையாட்டில் இருந்து அவரது கவனம் திசை திரும்பியது.
கடந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் ரட்சிதா ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்ய, பிறகு ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தாவை நாமினேட் செய்ய என பார்ப்பதற்கு கலகலப்பாக இருந்தது. ராபர்ட் மாஸ்டர் ஆட்டத்தின் மீது கவனம் இல்லாமல் இருக்கிறார் என்று கூறியே ராபர்ட் மாஸ்டரை அவர் நாமினேட் செய்தார். இதில் மாஸ்டர் குறைவான ஓட்டுகள் பெற, அவர் நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் ராபர்ட் மாஸ்டர் சக போட்டியாளரான அசல் கோலாரை நேரில் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.