இன்று வாரம் முழுக்க நடந்த பிக்பாஸ் நீதிமன்றம், டாஸ்க் முடிந்தநிலையில், பிக்பாஸ் கொளுத்தி போட்டும் கேள்வியை கேட்டு அவரின் வேலையை ஆரம்பித்துவிட்டார்.


டாஸ்க்கின் விதிமுறைகள் 


ஒவ்வொருவராக பிக்பாஸ் கேமரா முன் சென்று, அவர்களின் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும்.


எப்படி இருந்தது பிக்பாஸ் நீதிமன்றம் ?


ஒவ்வொரு வாரமும், விதவிதமான டாஸ்க் விளையாடப்படும். சாதரணமாகவே, பிக்பாஸ் வீட்டில் அனைத்து விஷயங்களுக்கும் பேச்சுவார்த்தை நடக்கும். அந்தவகையில் இந்த வாரம் பேச்சுவார்த்தை செய்வதற்கே கொடுக்கப்பட்ட டாஸ்க்காக  பிக்பாஸ் நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் முழுவதுமே பெரிதாக எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை, இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து செய்யும் நெட்டிசன்களுக்கும் கண்டெண்ட் எதுவும் சிக்கவில்லை.


மூன்றாவது ப்ரோமோ : 







இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்கள் சற்று மொக்கையாகதான் இருந்தது. இப்போது, இறுதி ப்ரோமோ வெளியாகிவுள்ளது. அதில், சிறப்பாக விளையாடாத நபர்களின் பெயரை கூறவேண்டும் என்று பிக்பாஸ் அறிவிப்புவிடுக்கிறார். முதலில் வந்த ரச்சித்தா ராபர்ட் பெயரை சொல்ல, அதன் பின் வந்த ராபர்ட் ரச்சித்தா பெயரை சொன்னார். இதனைதொடர்ந்து அனைவரும் ரச்சித்தா, ராபர்ட் மற்றும் குயின்ஸி ஆகிய மூன்று பெயர்களை மாற்றி மாற்றி கூறுகின்றனர். அதிக நிராகரிப்புகளை பெற்ற ராபர்ட் மற்றும் குயின்ஸியை சிறைக்கு செல்லும்படியாக பிக்பாஸ் உத்தரவிடுகிறார்.


எஞ்சிய போட்டியாளர்கள்:


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரத்தில் நிவாஷினி வெளியேறினார்.


இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 15 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.