இந்த வாரத்தில் குறைந்த ஓட்டுகளை பெற்று ஏடிகே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.


இந்த வாரத்தில், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா  ரச்சித்தா மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்‌ஷன் நாமினீஸ்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


இதில், அதிக ரசிகர்களையும் ஆர்மிகளையும் வைத்திருக்கும் ஜனனியை, அதிர்ஷட வசமாக தப்பித்து வருகிறார் என்று பல சக போட்டியாளர்கள் அவருக்கு பட்டம் கட்டினர். அதனால், இம்முறை ஜனனி வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்றும் இவர் எலிமினேட் ஆகவிட்டால், அதிகமாக புறம் பேசிவரும் ஏடிகே வெளியேற வாய்ப்புள்ளது என்றும் பல பிக்பாஸ் ரசிகர்கள் கணித்தனர்.






அந்த வகையில், ஏடிகே அஸிமிடம் பயங்கரமாக சண்டையிட்டார். அத்துடன் நிறுத்திக்கொள்ளாத அவர், க்ரிஞ்சாக நடந்துகொண்டார். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும், இந்த வாரத்தில் வெளிவந்த ப்ரோமோவில் இடம்பெற்றது. இணையத்தில் வைரல் ஆன அந்த வீடியோவில்,  “என்ன இப்படி நடந்து கொள்கிறார்?”, “இந்த வாரம் ஏடிகே வெளியேறபோகிறார்” என்று பலர் கமெண்ட் செய்து இருந்தனர்.






பெரிதாக கேமை விளையாடமல், மற்ற போட்டியாளர்களிடம் சண்டையிடுவதையும் புறம் பேசுவதையும் வேலையாக வைத்திருந்த ஏடிகே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதை பார்த்த ஏடிகே ரசிகர்கள் சிலர், ஜனனிதான் நியாயமாக வெளியேறி இருக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.


எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். ஏழாம் வாரத்தில் குயின்ஸி வெளியேற்றப்பட்டார். எட்டாம் வாரத்தில் டபுள் எவிக்‌ஷனில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறினர். இப்போது, ஏடிகே வெளியேறவுள்ளார்.


எஞ்சிய போட்டியாளர்கள் :


இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, அமுதவாணன், விஜே கதிரவன், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், ஜனனி  மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 10 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.