பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஷிவின், விக்ரமன், அஸீம் என மும்முனைப்போட்டியில் ஒருவருக்கொருவர் சளைக்காத போட்டியாளர்களுடன் பிக்பாஸ் களம் சூடு பறக்க  காணப்படும் சூழலில், இன்று மாலை 6 மணிக்கு கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.


சென்ற ஆண்டு  அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தமாக 21 போட்டியாளர்கள் பங்குபெற்றனர். முதலில் 20 போட்டியாளர்கள் மட்டுமே அறிமுகமான நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி உள்ளே வந்தார்.
 
15 நபர்கள் வெளியேற்றம்:


இந்த போட்டியில் பங்குபெற்ற ஜி.பி. முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினாவும், நான்காம் வாரத்தில் மகேஸ்வரியும், ஐந்தாம் வாரத்தில் நிவாஷினியும், ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டரும், ஏழாம் வாரத்தில் குயின்ஸியும், எட்டாம் வாரத்தில் ராம் மற்றும் ஆயிஷாவும், ஒன்பதாம் வாரத்தில் தனலட்சுமியும், பத்தாம் வாரத்தில் மணிகண்டாவும், பதினோராம் வாரத்தில் ரச்சித்தாவும், பன்னிரண்டாம் வாரத்தில் ஏடிகே ஆகிய 15 நபர்கள் வெளியேறினர்.


மீதம் இருந்த 6 நபர்களில், கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின்னர், மிட் நைட் எவிக்‌ஷன் முறையில், மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இந்த சீசனின் இரண்டாவது பணப்பெட்டி டாஸ்க்கில் அமுதவாணன் 13,00,000 பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.


மேடையில் 3 ஃபைனலிஸ்டுகள்


இதனிடையே மீண்டும் விருந்தினராக வீட்டுக்கு வருகை தந்த எலிமினேட் ஆகி சென்ற போட்டியாளர்கள் உள்பட அனைவரும் நேற்றுடன் வீட்டை விட்டு வெளியேறினர்.


 






பிக் பாஸ் 24x 7 ஒளிபரப்பு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தநிலையில், பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே  நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்த முறை மூன்று ஃபைனலிஸ்டுகள் பிக் பாஸ் இறுதி மேடையை அலங்கரிக்க உள்ளனர்.