ஒரு இந்திய நடிகையாகவும், பல இந்தி திரைப்படங்களில் பிண்ணனி பாடகியாகவும் இருந்தவர் பிரணீதி சோப்ரா. தேசிய திரைப்பட விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகளை பெற்றவர். பிரணீதி சோப்ராவிற்கு டைவிங் செய்வதில் மிகுந்த ஆர்வம். ஒரு பொழுதுபோக்காக டைவிங் செய்ய தொடங்கியவர் தற்போது மாஸ்டர் ஸ்கூபா டைவர் பட்டத்தை வென்றதை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் ஒரு வீடியோவுடன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
டைவிங் மீது இருந்த மோகம் :
ஒன்பது வருடம் கடுமையான பயிற்சிக்குப் பிறகு மாஸ்டர் ஸ்கூபா டைவர் பட்டத்தை பிரணீதி சோப்ரா எப்படி அடைந்தார் என்பதை பற்றி முதல்முறையாக பகிர்ந்துள்ளார். பொழுதுபோக்குக்காக டைவிங் செய்ய தொடங்கி பின்னர் அதை கடுமையான பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் அதற்கான பயிற்சிக்காக தினசரி ஆக்டிவிட்டிகளில் ஒன்றாக நேரம் ஒதுக்கினேன். கடுமையான பயிற்சி, எப்படி மீட்க வேண்டும் போன்ற பல பயிற்சிகளை மேற்கொண்டு எண்ணற்ற டைவ்ஸ் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஒன்பது ஆண்டுகள் தீவிர முயற்சிக்கு பிறகு நூற்றுக்கணக்கான டைவ்களை கற்ற பிறகு இறுதியாக தற்போது மாஸ்டர் ஸ்கூபா டைவர் என்ற பட்டத்தை அடைந்துள்ளேன்.
கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன் :
தனது டைவிங் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பிரணீதி சோப்ரா "நான் இப்போது ஒரு மாஸ்டர் ஸ்கூபா டைவர்!!! இது முற்றிலும் வித்தியாசமான உணர்வு. ஒன்பது வருட கனவு இறுதியாக நனவாகியுள்ளது.. இத்தனை ஆண்டுகளாக எனது கனவு, பயிற்சி, மீட்பு ட்ரெய்னிங், கடுமையான உழைப்பு அனைத்தும் பலனளித்துள்ளது" என்ற ஒரு குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.
பயிற்சியாளர்களுக்கு நன்றி :
மேலும் தனது பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார். "நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். எனது பயணத்தில் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவு, உதவி மற்றும் பயிற்சிக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. நீங்கள் என்னுடைய குடும்பம் போன்றவர்கள். அனீஸ் மற்றும் ஷமீன் அடன்வாலாவுக்கு தான் எனது நன்றிகளை தெரிவிக்க வேண்டும். நீங்கள் இருவரும் தான் என்னுடைய டைவிங் பெற்றோர். அனைத்திற்கும் நன்றி என பதிவிட்டு இருந்தார் பிரணீதி சோப்ரா.