விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்கள் தான் எஞ்சியுள்ளன. இந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றியாளர் தெரிந்துவிடுவார்.


இந்நிலையில், கடைசி வார நிகழ்ச்சியில் எந்த சுவாரஸ்யமுமே இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.


ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகள் உலகளவில் பிரபலமானவை. அப்படி நகர்ந்து நம்ம ஊருக்கு வந்தது தான்  பிக்பாஸ். ஒரு வீட்டுக்குள்ள 100 நாள் இருக்கணுமாம். வீடு முழுக்க கேமராவாம் என்ற பல பல எதிர்பார்ப்பு பேச்சுகளுக்கு இடையே கமல்ஹாசன் குரலில் தொடங்கியது பிக்பாஸ். விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கும் தாறுமாறாக எகிறியது. முதல் சீசன் மீதான எதிர்பார்ப்பு அதனை பூர்த்தி செய்யவே செய்தது. ஜூலி, ஓவியா என பரபரப்பாகவே இருந்தது. ஆர்மிகளும், ஹேட்டர்களும் சோஷியல் மீடியாக்களில் சுற்றித் திரிந்தார்கள். முதல் சீசன் வெற்றி என்ற பெருமிதத்துடன் கணக்கை தொடங்கிய பிக்பாஸ் இன்று 5வது சீசனில் சென்றுகொண்டிருக்கிறது. 


சீசன் தொடங்கியதிலிருந்து நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்‌ஷரா, வருண், சஞ்சீவ், இறுதியாக தாமரை என மக்களின் ஓட்டு எண்ணிக்கை மூலம் எலிமினேட் செய்யப்பட்டனர். ‘Ticket to Finale’ டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்னொரு டேர் டாஸ்க் மூலம் நிரூப் இரண்டாவது நபராக டிக்கெட் டூ ஃபினாலே பெற்றார். 
நிரூப் டிக்கெட் பெற்ற டேர் டாஸ்க் ரசிகர்களைக் கவர்ந்தது. குறைகளைச் சொல்லி, நீரால் கழுவி, பூத்தூவி நிரூப்பை பாவனி, தாமரை, பிரியங்கா, அமீர், ராஜூ ஆகியோர் இறுதிப் போட்டிக்கு அனுப்பிவைத்தனர்.




அப்புறம் தாமரை எலிமினேட் ஆனார். தாமரைச் செல்வி எலிமினேஷனை எல்லோருமே உணர்வுப்பூர்வமாக எதிர்கொண்டனர். தொடக்கத்தில் இருந்தே கிராமத்து பெண்ணை எதிரொலிப்பதாக இருந்த தாமரைக்கு அனைவரும் பிரியாவிடை அளித்தனர். அதன்பின்னர், இப்போது பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா, ராஜூ, நிரூப், பாவனி, அமீர் மட்டுமே உள்ளனர். இரண்டு, மூன்று நாட்களே உள்ள நிலையில் வீட்டில் சுவாரஸ்யமே இல்லாமல் நிகழ்வுகள் நகர்கின்றன. பிக்பாஸ் ஃபைனலில் பாவனி தான் வெற்றி பெறுவார் என்றும் இல்லை நிரூப் தான் என்றும் சமூக வலைதளங்கள் தான் களை கட்டியுள்ளன. முன்பு பிரியங்காவும், ராஜூவும் தான் வெற்றிப் பட்டியலில் பேசப்பட்டனர். இப்போது கணிப்புகள் ஷிஃப்ட் ஆகி பாவனி மற்றும் நிரூப் பக்கமாக திரும்பியுள்ளது.


கடைசி நாட்களைக் கலகலப்பாகக் கொண்டு செல்லும் வகையில் சில, பல டாஸ்குகளைக் கொடுத்து நிகழ்ச்சியைக் கலகலப்பாக வையுங்கள் பிக்பாஸ் என மக்கள் கூறுவது விஜய் டிவிக்கும் கேட்கட்டும்.


பிக் பாஸ் 5 தமிழின் இறுதிபோட்டியானது ஜனவரி 16, 2021 (ஞாயிறு) அன்று மாலை 6 மணி முதல் மாலையில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.