பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சம்பளமாக சல்மான்கான் 1000 கோடி கேட்டதாக தகவல் வெளியான அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். 


வெளிநாடுகளில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் முதன்முதலாக இந்தியில் ஒளிப்பரப்பப்பட்டது. இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வெளிநாடு போல அங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் ஒளிப்பரப்பட்டன. 




அனைத்து சீசன்களையும் சல்மான் கானே தொகுத்து வழங்கினார். அதன்படி பிக்பாஸின் 16 ஆவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அவர் 1000 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. இந்தத்தகவல் பாலிவுட் திரைவட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதற்கு சல்மான் கான் விளக்கம் அளித்துள்ளார். 


அந்த விளக்கத்தில், “ நான் அவ்வளவு பெரிய தொகையை கேட்கவில்லை. உண்மையில் எனக்கு அவ்வளவு பணம் கிடைக்கும் பட்சத்தில், நான் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனது வக்கீல்களுக்கு ஏற்கனவே நிறைய பணத்தை செல்விடுகிறேன். இப்போது இது போன்ற தவறான தகவல்களால் வருமான வரித்துறையினரும் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர்.” என்று பேசியிருக்கிறார். 


 






இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்தே தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் பிக்பாஸ் அறிமுகமாகியது.  தமிழகத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் அக்டோபர் 9 ஆம் தேதி அதாவது அடுத்த வாரம் ஞாயிறு 6 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.  இந்த சீசனிலும் ரூட்டை மாற்றி களேபரம் செய்ய திட்டமிட்டும் இருக்கும் விஜய் டிவி வீட்டுக்குள்ளே போகும் போட்டியாளர்களையும் கண்கொத்தி பாம்பாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


யார் யார்? 


அந்தத்தகவல்களின் படி, இந்த சீசனில் விஜயி டிவி தொகுப்பாளர் ரக்சன், சுசித்ராவின் முன்னள் கணவர் கார்த்திக்குமார், சூப்பர் சிங்கர் ராக லெட்சுமி, இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா, தொகுப்பாளினி டிடி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் நடிகை ஸ்ரீநதி, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது..