சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாகவே கச்சா பாதம் என்ற பாடல் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு பிரபலங்கள், டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானவர் உர்ஃபி ஜாவத். இவர் தற்போது, இந்த கச்சா பாதம் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த பாடலுக்கு தனது பின்னழகை காட்டிக்கொண்டு இவர் ஆடும் ஆட்டம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதுகு முழுவதையும் இவர் காட்டிக்கொண்டு ஆடும் ஆட்டத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் உர்ஃபி ஜாவத் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் அவ்வப்போது ஏதாவது வித்தியாசமான சம்பவங்கள் அல்லது பாடல்கள், நிகழ்வுகள் பிரபலமாவது வழக்கம். சமீபகாலமாக அவ்வாறு பிரபலமாகும் சம்பவங்களை டிக்டாக வாசிகள் தாங்களும் அதுபோன்று செய்து பிரபலமாக முயற்சிப்பதும், பின்னர் அது மீம்சாகவும், ட்ரோலாகவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயன்படுவது வழக்கமாகி வருகிறது.
இந்த நிலையில், வட இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாம் விற்கும் வியாபாரி ஒருவர் பாதாமை விற்பதற்காக வித்தியாசமாக பாட்டு பாடி தனது பாதாமை விற்றுள்ளார். அவ்வாறு அவர் பாடிய கச்சாபாதம் என்ற பாடல் மிகவும் வைரலாகியது. சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த வியாபாரியின் பாடல் வரியையே அடிப்படையாக கொண்டு கச்சா பாதம் என்ற ஆல்பம் சாங் வெளியாகி மாபெரும் வைரலானது. 1 மாதத்திற்கு முன்பு வெளியான இந்த பாடலை 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூ டியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். உர்ஃபி ஜாவத் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் கச்சா பாதாம் பாடலுக்கு நடனமாடி தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், உர்ஃபி ஜாவத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பல படங்களில் தனது முதுகை காட்டியபடியே புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Watch video : மது பாட்டிலோடு பார் பெண்களுடன் டான்ஸ் ஆடிய முதியவர்.. கைது செய்த காவல்துறை.. ஏன்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்