நாகை மாவட்டத்தில் நாகை நகராட்சிக்கு 36 வார்டுகளும் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் வேளாங்கண்ணி பேரூராட்சியில் 15 வாத்துகளும் திட்டச்சேரி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் கீவளூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தலைஞாயிறு பேரூராட்சியில் 15-வார்டு களும் உள்ளன மொத்தம் நகராட்சி பேரூராட்சி களுக்கு 117 இடங்களுக்கு வரும் 19-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது இந்த நிலையில் வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 



 

நாளை வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் இன்று களைகட்டியது. அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் மட்டுமில்லாமல் மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, விஜய் மக்கள் மன்றத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்கள் என போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில்  7,8,13 உள்ளிட்ட 10 வார்டுகளில் விஜய் மக்கள் மன்றத்தினர்  வேட்பு மனு தாக்கல் செய்தனர். முன்னதாக தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக வந்த அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு குத்தாட்டம் போட்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் ரசிகர் மன்றத்தினர் நகராட்சி அலுவலகம் முன்பு குத்தாட்டம் போட்டதால் மேளதாளத்தை நிறுத்திய போலிசார் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

 



 

உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டார் என வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதால், நாகையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக பெண் வேட்பாளர் அதிர்ச்சி.

 



 

நாகப்பட்டினம் நகராட்சியில் போட்டியிட இன்று அதிமுக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் குவிந்தனர். அப்போது நாகை நகராட்சியில் 4வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிடும் அமிர்தவல்லி என்ற பெண் வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார். விண்ணப்பங்களை பூர்த்தி செய்த அதிமுக வேட்பாளர் அமிர்தவல்லி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான  ஜெயகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவை பரிசீலனை செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்காளர் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை என கூறி அம்மனுவை திருப்பி அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் வேட்பாளர் தனது பெயரை நீக்கம் செய்ததற்கான காரணத்தை கேட்டு வாதிட்டார். அப்போது தங்களது பெயர் நீக்கப்பட்டு இறந்தவர் பட்டியலில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார்.

 



 

இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான அதிமுக பெண் வேட்பாளர் அமிர்தவல்லி உயிருடன் இருக்கும் என்னை இறந்தவர் பட்டியலில் ஏன்? சேர்த்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நாகை நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

காலையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தன்னிடம் பெயர் பட்டியலை சரிபார்க்கிறோம் எனக்கூறி  அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக பெண் வேட்பாளர், உயிருடன் இருக்கும் தன்னை இறந்தவர் பெயர் பட்டியலில் சேர்த்து அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார் மேலும் தன் பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து 4 வது வார்டில் போட்டியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 



 

உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டார் என வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதால், நாகையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக பெண் வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்ய இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நாகை வட்டாட்சியர் ஜெயபால் கோட்டாட்சியர் மணிவேலன் உள்ளிட்டோர் இந்த உலகத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு விரைந்து வந்து வாக்காளர் பட்டியல் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.