புத்தகத்தின் அட்டைப்படத்திற்கு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள பாவனி ரெட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாடலாக தன் வாழ்க்கையை துவங்கிய பவானி ரெட்டி அறிமுகமானதே வெள்ளித்திரையில் தான். 21 வயதில் மாடல் அழகியாக அறிமுகமான பாவனி ரெட்டி, கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'லாகின்' எனும் திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கில் வெளியான டபுள் டிரபுள் மற்றும் ட்ரீம் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பாவனி ரெட்டி நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் அதன்பின்பு சரிவர வாய்ப்புகள் அமையாத காரணத்தால் தமிழில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் டிவியில் 'ரெட்டைவால் குருவி' சீரியல் மூலம் அறிமுகமாகி, சின்னதம்பி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் நந்தினி கேரக்டரில் சிம்மாசனமிட்டு அமர்ந்த இவர் அதற்கு பிறகு எந்த சீரியலிலும் காணவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் தவியாய் தவித்தனர். சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் விதமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு அதன் மூலம் மேலும் பிரபலமானார்.
பாவனி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை தக்கவைத்து கொள்வதற்காக சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கிறார். விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார். மாடலிங் துறைகளிலும் கலக்கிக் கொண்டு வருகிறார். தற்போது, ‘She' என்ற புத்தகத்தின் அட்டைப் படத்திற்கு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோஷூட்டின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாவனி. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்