Big Boss 7 Tamil: பிக்பாஸ் சீசன் 3இல் கெஸ்டாக வந்தபோது தனது நண்பனான கவினை ஏன் அடித்தார் என்பது பற்றி பிரதீப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பிக்பாஸ் வீடு, சிறிய பிக்பாஸ் வீடு என இரு வீடுகள் இருப்பதால் போட்டியாளர்களுக்கு இடையே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. இதற்கிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் கவினை அடித்ததற்கான காரணத்தை பிரதீப் கூறியுள்ளார். பிரதீப்பிடம் பேசிக் கொண்டிருந்த விசித்ரா, நீங்கள் ஏன் கவினை அடித்தீர்கள் எனக் கேட்கிறார். அதற்கு பதிலளித்த பிரதீப், பிக்பாஸ் 3வது சீசனில் ஒருநாளைக்கு மட்டும் கெஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தேன். அப்போது வனிதாவை எல்லாம் பார்த்தேன். கவினை அடித்தேன்” என்றார். அதற்கு கோபமான விசித்ரா “அடிக்கக் கூடாது, ஒருவரை நீங்கள் எப்படி கைநீட்டி அடிக்கலாம், நீங்கள் செய்தது தவறு” எனக் கூறினார்.
விசித்ராவுக்கு பதிலளித்த பிரதீப் ஆண்டனி, “என் மீது நெகட்டிவிட்டி வரவேண்டும் என்ற காரணத்துக்காக தான் அடித்தேன். அப்போது கவின் மீது நெகட்டிவ் பேச்சு இருந்தது. நான் அடித்தால் அது என் மீது திரும்பும் என்பதற்காகவே கவினை அடித்தேன். அதுதான் மக்களிடையே பேசப்படும்” என்றார். பிரதீப்புக்கு பதிலளித்த விசித்ரா, “ஒருத்தரை கைநீட்டி அடித்தால் அது சாகற வரை மறக்காது” என்றார்.
பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியதில் இருந்து ஆபாச வார்த்தை பேசுவேன் என்று கூறி சர்ச்சையாகி வரும் பிரதீப் தற்போது கவினை அடித்ததற்கான காரணம் கூறி டிரெண்டாகி வருகிறார்.
மேலும் படிக்க: Indian 2 Intro Video: விவேக் முதல் நெடுமுடி வேணு வரை.. இந்தியன் 2 அறிமுக வீடியோவில் கவனம் ஈர்த்த மறைந்த நடிகர்கள்!