BiggBoss 7 Tamil : விஷ்ணுவ தள்ளிவிட்டது யாரு? குறும்படம் போட ரெடியான கமல்.. களைகட்டும் பிக்பாஸ் எபிசோட்

“விஷ்ணுவை தள்ளி விட்டது யாரு...யுகேந்திரன் நீங்கள் பார்த்தீர்களா..காலை கொடுத்து கூட தள்ளி விடலாம். விஷ்ணு கேட்கும்போது நீங்கள் ஏன் சத்தியம் செய்யவில்லை” என கமல் சரமாரியாகக் கேள்வி எழுப்புகிறார்.

Continues below advertisement

Big Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் விஷ்ணுவை தள்ளிவிட்டது யாரு என்றும், நீங்கள் ஏன் சத்தியம் செய்யவில்லை எனவும் அக்‌ஷயாவை பார்த்து கமல்ஹாசன் கேட்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. 

Continues below advertisement

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில், கடந்த 3 வாரங்களில் அனன்யா, பவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா எலிமினேட் ஆகி இருக்கிறார்கள். 

இந்த வார கேப்டனாக பூர்ணிமா இருந்த நிலையில் சாப்பாட்டுக்காக சண்டை வெடித்தது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரு நாளும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் வைக்கப்படும். அந்த வகையில் வைக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் போட்டோஃபிரேமை எடுப்பதற்காக போட்டியாளர்கள் ஓடினர். அப்போது விஷ்ணு கால் தடுக்கி கீழே விழுந்தார். உடனே எழுந்த விஷ்ணு, அக்‌ஷயா தான் தன்னை தள்ளி விட்டதாகக் கூறி வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இந்த சம்பவம் பிக்பாஸ் போட்டியாளர்களையே அதிர்ச்சி அடையச் செய்தது. 

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் விஷ்ணுவை தள்ளிவிட்டது யாரு என கமல் கேட்பது இடம்பெற்றுள்ளது. ப்ரோமோ வீடியோவில், “விஷ்ணுவை தள்ளி விட்டது யாரு... யுகேந்திரன் நீங்கள் பார்த்தீர்களா.. காலை கொடுத்து கூட தள்ளி விடலாம். விஷ்ணு கேட்கும்போது நீங்கள் ஏன் சத்தியம் செய்யவில்லை” என அக்‌ஷயாவைப் பார்த்து கேட்கிறார்.

மேலும், அடிக்கடி வீடியோ போட்டுப்பாரு என விஷ்ணு சொல்லியதையும் கமல்ஹாசன் குறிப்பிட்டு பேசியுள்ளதால், விஷ்ணுவை யார் தள்ளிவிட்டது என்பது குறித்து தெரிந்து கொள்ள குறும்படம் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்றொரு ப்ரோமோவில் ’ஆத்திரத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு தான் அமர்வான் என்பதற்கு நிறைய உதாரணங்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளது. பணம் எனக்கு, பட்டம் உனக்கு என அவங்களே பாகப்பிரிவினை செய்து கொள்கிறார்கள். அதை முடிவு பண்ண வேண்டியது மக்கள். இதை அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்” என கமல்ஹாசன் பேசியதும் இடம்பெற்றுள்ளது. 

டாஸ்க்கில் அக்‌ஷயாவிடம் விஷ்ணு ஆக்ரோஷமாக நடந்து கொண்டது பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் மக்களையும் எரிச்சலடையச் செய்தது. அக்‌ஷயாவுக்காக பரிந்து பேச வந்த நிக்சனிடமும் விஷ்ணு கோபப்பட்டார். இதைத் தொடர்ந்து ரன்னிங் டாஸ்க்கில் தன்னை அக்‌ஷயா தான் கீழே தள்ளி விட்டதாகக் கூறி  விஷ்ணு கோபப்பட, அவரை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

இப்படி விஷ்ணு கோபத்தை வெளிப்படுத்துவதால், இன்றைய எபிசோடில் விஷ்ணுவை கமல்ஹாசன் கண்டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக விஜய் வர்மா சக போட்டியாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: Leo OTT Release: லீவுலாம் முடிஞ்சது.. இவ்வளவு சீக்கிரமா ஓடிடிக்கு வரும் விஜய்யின் ‘லியோ’... இதுதான் தேதி!

Vijayakanth: விவேக்குடன் நடிக்க மறுத்த 2 பிரபல ஹீரோக்கள்.. உடனடியாக ஓகே சொன்ன கேப்டன் விஜயகாந்த் - நெகிழ வைத்த சம்பவம்

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola