கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானது மூலமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகை பூமிகா. அதன் பின்னர் ரோஜா கூட்டம், ஜில்லுன்னு ஒரு காதல் , கொலையுதிர் காலம் போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அவரின் கதாபாத்திரம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. மேலும் பூமிகாவை அறியாத 90’ஸ் கிட்ஸ்களும் இருக்க முடியாது தானே! . தமிழில் அதிகமாக தலைக்காட்டாத பூமிகா, திருமணமத்திற்கு பிறகும் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி, எம்சிஏ, யு டர்ன் போன்ற தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் சில குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து தற்போதும் நடித்து வருகிறார். 40 வயதான நடிகையின் கிளாமர் புகைப்படங்களும் சமீபத்தில் வைரலானது.
இந்நிலையில் பிரபல நாளிதல் ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகை பூமிகா கொரோனா பெருந்தொற்று நமக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுத்தந்திருக்கிறது. மேலும் நாம் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தியுள்ளது என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் “ இந்த பெருந்தொற்று காலம் மற்றவர்களிடன் இன்னும் எத்தனை நலமுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது. எல்லா நேரத்திலும் மற்றவர்களை சார்ந்து இல்லாமல் , நாமே நம்மை பார்த்துக்கொள்ள முடியும்.
உண்மையான மகிழ்ச்சி என்பது உங்களது குடும்பமும் , ஆரோக்யமான உடல் நலனும்தான் . எப்போதுமே நாம் செய்யும் தொழிலையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களுக்கான நேரத்தை செலவிடுவது முக்கியம். நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கான அவசியம் என்ன என்பதை நாம் உணர வேண்டும். நேரத்தை சரியாக பயன்படுத்துவது, எதற்காக நாம் முன்னுரிமை கொடுக்கிறோம் என இரண்டுமே முக்கியம்தான் “ என பூமிகா தான் கொரோனா காலக்கட்டத்தின் உணர்ந்த வாழ்க்கையின் நிதர்சனத்தை பகிர்ந்துள்ளார்.