பிரபல பின்னணி பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி திரையுலகினரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள்,ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 



இசைஞானியின் வாரிசு


இசைஞானியின் இளையராஜாவின் மகளான பவதாரிணி, பிரபல பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தார். தனித்துவமான குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட அவர் தனது 47வது வயதில் கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

 

இந்த பிரச்சினைக்காக இலங்கைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்றிருந்த அவர், அது பலனிக்காமால் நேற்று காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.  இவரது மறைவுக்கு பிரபலங்கள்,ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் கமல்ஹாசன்


மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல் என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். 

நடிகர் சிலம்பரசன் 



உங்களின் அப்பாவித்தனத்திற்காகவும், அன்பிற்காகவும் மக்கள் இதயத்தில் என்றும் வாழும் குரல்! நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள்! சீக்கிரம் சென்றுவிட்டார்! இந்த தருணத்தில் இளையராஜா சார் மற்றும் எனது சகோதரரின் யுவன் குடும்பத்தினருக்கு வலிமை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நிம்மதியாக இருங்கள் பவதாரிணி என்றார் நடிகர் சிம்பு. 


நடிகர் வடிவேலு


”அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள், செல்லப்பிள்ளை பவதாரிணி காலமானார் என்ற செய்தியை கேட்டதும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஒன்றும் புரியவில்லை. தெய்வக் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  இறந்தது எனது இதயம் நொறுங்கியது. சாதாரண குழந்தை இல்லை பவாதாரிணி. குயிலோடு குரல் அவரது.


கள்ள கபடம் இல்லாத பிள்ளை தீடீரென மறைந்தது உலக தமிழர்கள் அனைவரும் நொறுங்கியிருப்பாங்க. இதை,  யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  அண்ணன் இளையராஜா மற்றும் அவரது குடும்பங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. தைப்பூச தினத்தில் பவதாரிணி மறைந்துள்ளார்.  


பவதாரிணி ஆன்மா முருகனின் பாதங்களை சரணடையட்டும். தங்க மகள் பவாதாரிணி ஆன்மா சாந்தியடையட்டும். பவாதாரிணியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதயம் நொறுங்கி சொல்கிறேன். பவாதாரிணி அம்மா ஆன்மா சாந்தியடையட்டும்" என்று கண்ணீர் ததும்ப வடிவேலு பேசியுள்ளார். 




மேலும் படிக்க


Bhavatharini Death: தேவதை குரல் கொண்ட பெண்.. பாடகி பவதாரிணி மறைவால் மனமுடைந்த பிரபலங்கள்


“தேனினும் இனிய குரல்வளம்; ரசிகர்களின் மனதில் தனியிடம்” - பவதாரிணி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்