பாரதிராஜா உடல் நிலை: இயக்குனர் சுசீந்திரனுக்கு தரப்பட்ட வாக்குறுதி!

Valli Mayil Shooting: 'வள்ளி மயில்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது  தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், தென்காசி  உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது .

Continues below advertisement

Valli Mayil 2nd Schedule shooting started:  பாரதிராஜாவிற்காக காத்திருக்கும் வள்ளி மயில் படக்குழுவினர்

Continues below advertisement

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். குடும்பத்தாரின் வேண்டுதலின் படி சிறந்த சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பாரதிராஜா. 

விரைவில் வீடு திரும்ப வேண்டும்  : 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இயக்குனர் பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அவர் மருத்துவ வல்லுனர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவ  அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.  தற்போது தான் குணமடைந்து வருவதாகவும், என் உடல்நலன் மீது அக்கறை கொண்டு கவலை பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து விரைவில் நலம் பெற்று உங்களை சந்திப்பேன் என்று நம்புகிறேன் என கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் பாரதிராஜா. 

 

 

பாரதிராஜாவின் மனதைரியம்:

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் "வள்ளி மயில்" திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரின் உடல்நலக்குறைவால் அவரை நேரில் சென்று பார்த்த இயக்குனர் சுசீந்திரன் "நான் பாரதிராஜா அப்பாவை சந்தித்தேன். இந்த மாத இறுதியில் தான் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்" என கூறியுள்ளார் பாரதிராஜா. இது குறித்து சுசீந்திரன் கூறுகையில் பாரதிராஜா அப்பாவோடு இணந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் என கூறியுள்ளார். 

 

 

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'வள்ளி மயில்' படத்தில் மெயின் ரோலில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு ஜோடியாக இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ஃபரியா அப்துல்லா. மேலும் சத்யராஜ், பாரதிராஜா, அறந்தாங்கி நிஷா, மனிஷா யாதவ், தம்பி ராமையா, சுனில் மற்றும் ரெடின் கிங்ஸ்லி  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையில் இப்படத்தை நல்லுசாமி பேனரின் கீழ் தயாரிக்கிறார் சரவணன்.    

படப்பிடிப்பு தொடங்கியாச்சு:

'வள்ளி மயில்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது  தொடங்கியுள்ளது. இது குறித்து கூறுகையில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் படப்பிடிப்பை தொடங்கியதால் மகிழ்ச்சியில்  உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், தென்காசி  உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று அடுத்த 32 நாட்களில் முடிவடைய திட்டமிட்டுள்ளோம் என்றார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் பாரதிராஜா கூடிய விரைவில் முழுவதுமாக குணமாகி படப்பிடிப்பில் வந்து எங்களோடு கலந்து கொள்ள  வேண்டும் என கடவுளை பிராத்திக்கிறோம்  என்றார். 

இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் நடித்த திருச்சிற்றம்பலம், அவருக்கு நடிப்பில் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola