விஜய் டிவி-யில் மிகவும் பிரபலமான, விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்  சூப்பர் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் தினமும் எதாவது ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. இது மக்களையும் ஈர்த்துள்ளது.


எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வரும் மனைவி கண்ணம்மாவை ஏற்று கொள்கிறேன்; ஆனால் அதற்கு நிபந்தனை ஒன்றை பாரதி வித்தார். ஆனால் அதை கண்ணம்மா ஏற்று கொள்ளவில்லை. வழக்கம் போல பாரதி, கண்ணம்மா மீது சந்தேகம் கொண்டத்துதான் மிச்சம். கண்ணம்மா தன் பிறந்தநாளன்று பாரதி மற்றும் அவரது இன்னொரு மகளிடம் எல்லா உண்மைகளை சொல்லிவிடலாம் என்றிருந்தார். ஆனால் அதுவும்  நடக்கவில்லை. இப்படி இருக்கையில் உண்மையை உண்மையை யார் கண்டுபிடிப்பார் என்ற கேள்வியுடன் இருக்கிறார்கள் பார்வையாளர்கள். 


கண்ணம்மாவின் மகள்கள் இருவரும் இப்போது வளரத் தொடங்கிவிட்டார்கள். அதனால் அவர்கள் எல்லாவற்றையும் நன்கு கவனிக்கத் தொடங்கிவிட்டனர். அப்படி லட்சுமி பாரதி, சவுந்தர்யா, ஹேமா குறித்து யோசிக்கத் தொடங்கியிருக்கிறார். சவுந்தர்யா கண்ணம்மா இருவரும் பழகும் விதத்தை வைத்து எப்படி இவர்கள் இவ்வளவு அன்புடன் நெருக்கமாக பழகுகிறார்கள் என்ற எண்ணம் லட்சுமிக்கு எழுந்துள்ளது.


இதற்கிடையில், பாரதி கண்ணம்மா இருவரையும் பேச விடாமல் தடுக்க வெண்பா தீவிரமாக பல செயல்களை செய்து வருகிறார். அப்படித்தான், ஹேமாவிற்கு வெண்பா பிரியாணி செய்து மதியம் ஸ்கூலில் அவருக்கு கொடுத்தார். ஹேமாவும் அன்று மதியம் லன்சுக்கு சமையல் அம்மாவான கண்ணம்மா கொண்டுவந்த உணவை சாப்பிடவில்லை. பிரியாணி என்றவுடன் குட்ஷியுடன் சாப்பிட்டுவிட்டாள். இது கண்ணம்மாவிற்கு வருத்தம் இருந்தாலும், ஹேமாக்கு பிடித்த உணவைச் சாப்பிடுகிறேன் என்று சொல்கிறாளே என்று விட்டுவிட்டார். ஆனால் கண்ணம்மாவிற்கு வெண்பா மீது கடும் கோபம் தலைக்கேறியது. வெண்பா பாரதியை அடைய எந்த எல்லைக்குவரை செல்வாள் என்ற திட்டத்துடன் இருக்கிரார். அதற்காக அடுத்த நாளும், வெண்பா மதியம் ஸ்கூலிற்கு லன்ச் கொண்டு வந்தார். கண்ணம்மா ஹேமா, லட்சுமி உடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஹேமாவிடம் வெண்பா, உனக்கு நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். சாப்பிடலாம் வா என்றாள். அதற்கு ஹேமா, “ஐய்யோ! நீங்க சமைத்த சாப்பாடு வேணாம். நேத்திக்கு நீங்க கொடுத்த சிக்கன் பிரியாணி சாப்பிட்டுட்டு எனக்கு ஃபுல் டே வாந்தி வரமாரி இருந்தது. எனக்கு உடம்பு சரியில்லாம்ல் போயிடுச்சு. பாட்டி, தாத்தா கண்ட சாப்பாடு சாப்டா இப்படிதான் உடம்புக்கு ஒத்துக்காது என்றாங்க. நேத்து முழு நாளும் எனக்கு வாந்தி வரமாதிரி இருந்துச்சு. எனக்கு உங்க சாப்பாடு வேணாம். அப்பறம், டாக்டர் ஆண்டி, இனிமேல் நீங்க எனக்கு சாப்பாடு கொண்டு வராதீங்க. எனக்கு வேண்டாம். ஒரு நாளைக்கே உங்க சாப்பாட சாப்டதுக்கு எனக்கு வாந்தி வந்துச்சு. உங்க சாப்பாட தினமும் சாப்ட்டா, நான் தினமும் எனக்கு வாந்தி வரமாதிரி இருக்கும். என்றாள்.


இதை கேட்ட வெண்பாவிற்கு அதிர்ச்சியாகவும் வெறுப்பாகவும் இருந்தது. தனது திட்டங்கள் எல்லாம் இப்படி வீணாகிறதே என்ற கவலையுடம் வீடு திரும்பினாள்,வெண்பா.


இதற்கிடையில் தன் பேத்திகளைப் பார்க்க பள்ளிக்கு சவுந்தர்யா வந்து கண்ணம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஹேமா சமையல் அம்மா உங்களுக்கு ஊட்டி விடனும்னு ரொம்ப நாள் ஆசை. இந்தாங்க சாப்பிடுங்க என்று சொல்லி, சாப்பாட்டை கண்ணம்மாவிற்கு ஊட்டி விடுகிறாள் ஹேமா. இதைப் பார்த்ததும் சவுந்தர்யா நெகிழ்ச்சியடைகிறாள். கண்ணம்மாவும் ரொம்பவே ஹேப்பி.


வெண்பா தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் மாயாண்டியை கொலை செய்ய ,கிச்சனில் ஒளித்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுக்கிறாள். அதனை பார்த்து அதிர்ச்சியடையும் சாந்தி, வேண்டாம் அம்மா. ஏற்கனவே உங்க மேல கேஸ் இருக்கு. இப்போ கொலையும் பண்ணா, ஆயுசுக்கும் ஜெயில்லதான் இருக்கணும். அப்புறம் பாரதி கூட வாழ முடியாது என சொல்கிறாள்.


இந்த வாரத்தில் நேற்றுவரை இவ்வளவும் நடந்திருக்கிறது. ஆனால், ஹேமா யாருடைய மகள் என்ற உண்மையை யார் கண்டுபிடிக்கிறார் என்ற கேள்வி தொடர்கிறது. லட்சுமி தான் மொத்த உண்மையும் கண்டுப்பிடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.