சூர்யா விவகாரத்தில் சினிமாத்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது என பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான பிஸ்மி தெரிவித்துள்ளார்.
ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் படத்தையும், படத்தில் பணியாற்றியவர்களையும் பாராட்டினர்.
இதற்கிடையே படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யா பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். எனினும், ஜெய் பீம் திரைப்படத்தை சுற்றியுள்ள சர்ச்சைகள் ஓயவில்லை. தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியது. இதன்காரணமாக, நடிகர் சூர்யாவை சப்போர்ட் செய்வதாக அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா விவகாரம் குறித்து த்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான பிஸ்மி ஏபிபி நாடுக்கு பிரத்யேக நேர்காணலில் பேசினார். அதில் இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்தவேண்டிய கட்சி பாஜக என்றும், தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய கட்சி பாமக என்றும் பேசினார். மேலும் சூர்யா விவகாரத்தில் சினிமாத்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமூகப்பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் சூர்யாவின் பாதை சரியானதா என்ற கேள்விக்கு பதிலளித்த பிஸ்மி, ''எல்லா நடிகர்களுக்கும் அரசியல் பார்வை இருக்கணும். சமூகத்துக்கு எதாவது ஒரு பிரச்னை என்றால் குரல் கொடுக்க வேண்டும். இது ஒரு அடிப்படை பண்பு. ஆனால் இந்தப்பண்பில்லாத நடிகர்கள் இங்கு நிறையப் பேர் உண்டு. பல பேர் கண் முன்னே அநீதி நடந்தாலும் வாயை திறப்பதில்லை. ஐடி ரெய்டு வரும் என பயப்படுகிறார்கள். குறிப்பாக விஜய் மாதிரியான ஹீரோக்கள் ஆடியோ லாஞ்சில் பேசி அதனை பேசுபொருளாக்கி அந்தப்படத்தை ஓட வைக்கிறார்கள். அதன் மூலம் சம்பளத்தை மேலும் ரூ.2 கோடி அதிகரித்துக்கொள்கிறார்கள். அந்த வகையில் சமூகப்பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் சூர்யா பாராட்டுக்குரியவர்'' என்றார்.
முழு நேர்காணல்: