பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் லட்சுமிக்கு விக்கல் வந்ததால் தண்ணீரை பாரதிக்கு எடுக்கச் சென்றபோது திடீரென ஃபேன் அறுந்துவிழுகிறது. எப்படி சிறுவயதில் ஹேமா பாரதியை காப்பாற்றினாரோ இதேபோன்று லட்சுமி காப்பாற்றினார் என்று பாரதி யோசிப்பது போன்று கதைக்களம் நகர்கிறது.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக கடந்த ஓராண்டு காலங்களாக பாரதி கண்ணம்மா சீரியலைப்பார்க்கும் ரசிகர்கள் ஐய்யோ எப்பது முடியும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். அந்தளவிற்கு சீரியலை இழுவாய் இழுத்துவருகின்றார் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குநர். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் போதும், யார் ஹேமா மற்றும் லட்சுமியின் அப்பா என்பதை பாரதி தெரிந்துக்கொள்வார். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கதைக்களத்தை நகர்ந்துவருகிறது.



இந்நிலையில்தான் கண்ணம்மாவுடன் சண்டையிட்டு அப்பாவைத் தேடி அலைந்த லட்சுமி, ஒரு வழியாக பாரதி தான் அப்பா என்பதை அறிந்துகொண்டார். இதனையடுத்து எப்படியாவது அப்பாவுடன் அம்மா கண்ணம்மாவை சேர்த்து வைக்க வேண்டும் என்ற முனைப்போடு உள்ளார் லட்சுமி. இதனால் கண்ணம்மாவிடம் ஹேமாவுடன் சேர்ந்து படிக்கப்போவதாகக் கூறி, பாரதி வீட்டில் தங்குகிறார். இதனால் ஒரு புறம் மிகுந்த மன வேதனையில் உள்ளார் கண்ணம்மா.


இதற்கிடையில்தான் டூருக்கு லட்சுமி மற்றும் ஹேமா கிளம்புகின்றனர். ஆனால் அவர்களுடன் யார்? துணைக்குவரப்போகிறார்கள் என்ற குழப்பம் இருந்த நிலையில் தான் பாரதி வர ஒத்துக்கொள்கிறார். இதனையடுத்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சௌந்தர்யா சாப்பாடு ஊட்டிவிட்டு கீழே செல்ல அனைவரும் அங்கிருந்து செல்கின்றனர். பாரதி, லட்சுமி மற்றும் அங்கேயே இருக்கின்றனர். அந்த நேரத்தில்தான் லட்சுமிக்கு விக்கல் வரவே, பாரதி தண்ணீர் எடுக்க எழுகிறார். அங்கிருந்து பாரதி சிறிது தூரம் சென்றதும் அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்த ஃபேன் திடீரென அறுந்து கீழே விழுகிறது. டாக்டர் அப்பா என லட்சுமி அலறியதும், குடும்பத்தினர் வந்து அதிர்ச்சியுடன் அங்கு வருகின்றனர்.


பயத்தில் அமரும் பாரதி இதேபோல் ஹேமா குழந்தையாக இருக்கும்போது காப்பாற்றப்பட்டதை நினைத்துப்பார்ப்பது போன்று காட்சிகள் அமைகிறது. 


 



இதனைத்தொடர்ந்து பாரதி தன்னுடைய இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்து சென்ற நிலையில், குழந்தைகள் கண்ணம்மாவையும் டூருக்கு அழைக்கிறார்கள். ஆனால் எனக்கு நிறைய வேலை இருக்கின்றது என சொன்னாலும் குழந்தைகள் அடம் பிடித்ததன் பேரில் ஒருவழியாக கண்ணம்மா ஒகே எனக் கூறுகிறாள். இதனைத்தொடர்ந்து அனைவரும் டூர் செல்ல கிளம்புவது போன்ற இன்றைய எபிசோட் நிறைவடையது போல் காட்சிகள் அமைகிறது.