பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதி உண்மையை அறிந்துவிட்டால் கதைக்களம் விறுவிறுப்பாக நகரும். ஆனால் இயக்குநர் நிச்சயம் சம்மதிக்கமாட்டார் என ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர்.
விஜய்டிவியின் சீரியல்கள் என்றாலே விறுவிறுப்பாக இருப்பதோடு அனைத்துத் தரப்பட்ட ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துவைக்கும் திறன் கொண்டிருக்கும். அதில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. கிட்டத்தட்ட சுமார் 1000 எபிசோட்டுகளை நெருங்கினாலும் இன்னும் இழுவையாய் இழுத்து வருகின்றனர்.
இச்சீரியலில் நாயகன் டாக்டர பாரதி, தன்னுடைய மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாக தனது தோழி வெண்பாவின் பேச்சைக்கேட்டு சந்தேகப்படுகிறார். தனது குழந்தைக்குப் பாரதிதான் அப்பா என கண்ணம்மா சொல்லிக்கொண்டிருந்தாலும் இதனை ஏற்க மறுக்கிறார் டாக்டர் பாரதி.
இதனையடுத்து பாரதி வீட்டை விட்டு வெளியே கண்ணம்மா துணிச்சலுடன் தனது குழந்தை லட்சுமியுடன் வாழ ஆரம்பிக்கிறார். மற்றொருபுறம் கண்ணம்மாவிற்குப் பிறந்த ஹேமாவை சௌந்தர்யா எடுத்துச்சென்றதால் பாரதியிடம் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் 8 ஆண்டுகளுக்குப்பிறகு தனது அப்பா யார் என தெரிந்துக்கொள்வதில் லட்சுமி ஆர்வம் காட்டி வந்தநிலையில் தான், தனது அப்பா பாரதி தான் என அறிந்துக்கொள்கிறார்.
இதனயைடுத்து கடந்த இரண்டு எபிசோட்டுகளாக பாரதியின் வீட்டில் லட்சுமி வாழ்ந்துவருகிறார். ஆனாலும் பாரதிக்கு கண்ணம்மா மீது சந்தேகம் தீர்ந்தப்பாடில்லை. இப்படி கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்து வந்தாலும் எப்பொழுதாவது உண்மையைச் சொல்லிவிடவேண்டும். ஆனால் இயக்குநர் அப்படி செய்யவில்லை. குறிப்பாக பாரதி டி.என்.ஏ டெஸ்ட்டை யாருக்கும் தெரியாமல் எடுத்து தன்னுடன் இருக்கும் குறைகளை அறிந்திருக்க வேண்டும். ஆனால் கதைக்களத்தை அவ்வாறு நகர்த்தவில்லை இயக்குநர்.
மற்றொரு புறம், கண்ணம்மா தான் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். ஆனால் அதனையும் கண்ணம்மா மேற்காள்ளவில்லை. இப்படி இருவரும் தன் பக்கம் இருக்கும் விஷயங்களை தெரிந்து நடந்துக்கொண்டாலே சீரியல் விரைவில் முடிந்துவிடும். ஆனால் நிச்சயம் இதனை நடத்திக்காட்டமாட்டார் என ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர்.
இது ஒருபுறம் கடந்த வார எபிசோட்டில், பாரதி வீட்டிற்கு வந்த லட்சுமி, சாப்பிடும் போது தண்ணீர் கொடுப்பதற்காக பாரதி எழுந்திருக்கிறார். அப்போது மேலே சுற்றிக்கொண்டிருந்த ஃபேன் கீழே விழுகிறது. இதனால அதிர்ச்சியாகும் பாரதி அப்படியே நிற்க, வீட்டில் உள்ள அனைவரும் வருகின்றனர். அப்போது ஹேமா சிறு குழந்தையாக இருக்கும்போது அவர் அழுகிறார். அப்போது பாரதி எழுந்திருக்கும்போது ஃபேன் கீழே விழுகிறது. இப்போது அதை நினைத்துப் பார்க்கும் பாரதி, ஹேமா போலவே லட்சுமியும் பாசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கப்போறாரா? அல்லது கண்ணம்மா இத்தனை முறை நம்மிடம் சொல்கிறாளே என்று உண்மையைக் கண்டறிய போகிறாரா? என்ற கோணத்தில் தான் கதைக்களம் நகர வேண்டும்.
ஆனால் நாம் என்ன நினைத்தாலும் அதற்கேற்றால் போல் இயக்குநர் செய்ய மாட்டார் எனவும், நிச்சயம் வேறொரு ஸ்கிரிப்புடன் கதையை நகர்த்துவார் எனவும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கமெண்ட்களைத் தெறிக்கவிடுகின்றனர்.