விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிப்பரப்ப தொடங்கிய நாளிலிருந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சின்னத்திரைக்கு புது முகங்களான அருண் பிரசாத், ரோஷினி, கண்மணி ஆகியோரை முன்னிலைப்படுத்தி இயக்குனர் சீரியலை தொடங்கினார். முக்கியமாக இந்த சீரியலில் மாமியார் சவுந்தர்யா ரோலுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. 1 வருடத்திற்கு பிறகு சீரியல் டாப் ரேட்டிங்கில் வர தொடங்கியது.


அடுத்த சில மாதங்களில் விஜய் டிவி டாப் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸை ஓரங்கட்டி பாரதி கண்ணம்மா சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். பொதுவாகவே சீரியல்களுக்கு ஹீரோ-ஹீரோயின்கள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் வில்லிகள்தான்.


வில்லி இருந்தால் மட்டுமே தான் ஹீரோ ஹீரோயின்களுக்கு அங்கு வேலை. அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் வெண்பா கதாபாத்திரம் என்று சொல்லலாம். இந்த சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வருபவர் தான் ஃபரீனா.



இவர் இதற்கு முன்னாடி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது நடிகையாக மிரட்டி வருகிறார். இதனிடையே இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், கடந்த ஆண்டு இவர் கர்ப்பமாக இருந்தார். தான் கர்ப்பமாக இருந்த காலத்திலும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர், சமீபத்தில் ஒரு ஆண்குழந்தை பெற்றெடுத்தார். அதன்பிறகு சில எபிசோடுகள் ஓய்வில் இருந்த ப்ரீனா தற்போது மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லத்தனத்தை தொடங்கியுள்ளார்.


ஆனால் இவர் கர்ப்பமாக இருந்தபோதும், டெலிவரிக்கு சென்றபோதும், பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு ப்ரீனா ஆசாத் விலக உள்ளதாக பல கருத்துக்கள் உலா வந்தது. ஆனால் சீரியல் குழு இவரையும், அவர் பாரதி கண்ணம்மா சீரியலையும் விடுவதாக தெரியவில்லை, தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருந்தார்.. இதனால் இவர் சிறைக்கு செல்வதுபோல காட்சி அமைத்து அவருக்கு டெலிவரிக்கு ஓய்வு கொடுத்து அனுப்பினர்.






அவரும் குழந்தை பிறக்கும் வரை காத்திருந்து, எடுக்க வேண்டிய ஓய்வுகளெல்லாம் எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்துவிட்டார். பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய அடையாளமாக இருக்கும் ப்ரீனா ஆசாத், தற்போது வேறு சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியின் முக்கிய சீரியலான அபி டெய்லர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண் தொழில்முனைவோர்களின் கதையையும், போராட்டங்களையும் உயிரோட்டமாக திரையில் காட்டுகிறது அபி டெய்லர் சீரியல். ரேஷ்மா மதன் இணைந்து நடித்து வரும் இந்த சீரியலில், தற்போது பரீனா ஆசாத் எண்ட்ரி கொடுத்துள்ளார்.


இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த உடன் ரசிகர்கள் அனைவரும் அப்போ நீங்கள் பாரதி கண்ணம்மாவில் இருந்து வெளியேறி விடுவீர்களா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு ஃபரீனா தரப்பில் இருந்தும் பாரதிகண்ணம்மா சீரியல் குழுவில் இருந்தும் என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். அது மட்டுமில்லாமல் ஃபரினாவுக்கு கலர்ஸ் தமிழ் புதிது இல்லை. இவர் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான தறி என்ற சீரியலில் நடித்து இருந்தார். தற்போது அபி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வந்துள்ளது