பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் என்னை யாருக்குமே பிடிக்கவில்லை என அதில் ஹீரோயினாக நடித்த ரோஷினி ஹரிப்பிரியன் தெரிவித்துள்ளார். 


பாரதி கண்ணம்மா ஹீரோயின்:


விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன். அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் பிரபலமான நிலையில், மீம் மெட்டீரியலாகவும் மாறினார். திடீரென அந்த சீரியலை விட்டு விலகியவர் சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் உன்னி முகுந்தன் ஜோடியாக எண்ட்ரீ கொடுத்தார். 


வாழ்க்கையை கெடுக்கக்கூடாது:


இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தன்னுடைய கலையுலக வாழ்க்கை பற்றி பேசியிருந்தார். அதில், “பெரிய படத்துக்காக (கருடன்) நான் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு போகவில்லை. இன்னும் என்னுடைய ரசிகர்கள் சீரியலை விட்டு ஏன் சென்றீர்கள் என கேட்கிறார்கள். சரியான வழியனுப்புதல் இல்லை என ஆதங்கப்படுகிறார்கள். என்னை பயங்கரமாக திட்டியிருக்கிறார்கள். பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் முடிவை ஓராண்டாக யோசித்து எடுத்தேன். அனைவரிடமும் கலந்தாலோசித்து தான் இந்த முடிவை எடுத்தேன். அந்த நேரத்தில் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அதேசமயம் என்னுடைய கேரக்டரில் புதிதாக வினுஷா தேவி நடிக்க வந்தார். மிகப்பெரிய கனவுடன் புதிதாக வந்த அவரின் வாழ்க்கையை கெடுத்து விட கூடாது என்ற எண்ணமும் இருந்தது. 


யாருக்கும் என்னை பிடிக்கவில்லை:


பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் என்னை யாருக்குமே பிடிக்கவில்லை. ஹீரோயினுக்கான டெம்பிளேட்டை நான் உடைத்ததை நான் உடைத்தேன். செட்டில் கூட ஹீரோயினாக ஏற்றுக்கொள்ளாத நிலையை நேரில் கண்ட போது ரொம்ப  வருத்தப்பட்டேன். சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும்போது மரியாதை இருந்தது. சீரியலை விட சினிமாவில் நாம் தயாராவதற்கு நேரம் கொடுப்பார்கள். அது மிகவும் வசதியாக இருந்தது. அதனால் சீரியலை விட சினிமாவை  என்ஜாய் பண்ணினேன். பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக போனதால் ஒரு அன்பு இருந்தது. 


ஆரம்பத்தில் சங்கடங்கள்:


சார்பட்டா பரம்பரை படத்தில் துஷாரா கேரக்டருக்கு என்னை ஆடிஷன் செய்தார்கள். பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் வண்ணம் சம்பவங்கள் நடந்தது. வெள்ளையாக அழகாக இருப்பவர்களையும், நன்றாக உடை உடுத்துபவர்களையும் மதிப்பார்கள். ஆனால் அந்த சீரியலில் என்னுடைய நிறமும், உடையும் ஒரு மாதிரி தான் இருக்கும். இப்பவரைக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. பாரதி கண்ணம்மா செட்டில் ஆரம்பத்தில் சங்கடமான சம்பவங்கள் நடந்தது.


அந்த சீரியலில் நான் இணைந்தபோது முடி எனக்கு குறைவாக இருந்தது. ஹேர் ஸ்டைலிஸ்ட் உடன் சண்டை நடந்துக் கொண்டே இருக்கும். ஒரு காட்சியில் நான் ஓடிப்போற மாதிரி எடுத்தார்கள். அப்போது சவுரி முடி வைத்திருந்தார்கள். அதையும் நானே வைத்துக்கொண்டு ஓடினேன். அந்த காட்சியின்போது நடுரோட்டில் சவுரி முடி கழண்டு விழுந்தது. எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நான் கண்டுக்கொள்ளாமலே சென்று விட்டேன்" என ரோஷினி ஹரிப்பிரியன் தெரிவித்துள்ளார்.