Axess நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள 12 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபல நடிகர் பரத். சக்தி எம் எஸ் வேல் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் பரத்துடன் ஜோடிசேர்க்கிறார் பிரபல நடிகை வாணி போஜன். இன்று ஞாயிற்றுக்கிழமை, பூஜையுடன் அந்த படத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

All set for my next with @AxessFilm @Dili_AFF @vanibhojanoffl @nameissakthi for #productionno12 . Need all your love and blessings !! More updates soon. #supersunday #keepmarchingforward pic.twitter.com/YSvLUqv4fr
— bharath niwas (@bharathhere) April 11, 2021

2003-ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பரத், 11 வயதில் இருந்தே நடனம் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003-ஆம் ஆண்டு தொடங்கிய குறுகிய காலத்தில் பல படங்களில் நாயகனாக தோன்றி அசத்தினார். கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில் மீண்டும் காளிதாஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இந்த 2021-ஆம் ஆண்டு துல்கர் சல்மானின் குருப் உள்பட 9 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.