இந்த ஆண்டிற்கான திருமதி ஸ்ரீலங்கா 2021 போட்டி கடந்த ஏப்ரல் 4ம் தேதி கொழும்புவில் உள்ள நீளும் போக்குன்னா என்ற திரையரங்கில் நடந்தது. அமைதியாக நடந்த இந்த போட்டியின் இறுதியில் திருமதி. புஷ்பிக்கா டி சில்வா 2021ம் ஆண்டிற்கான வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மகுடம் சுட்டப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் முன்னாள் திருமதி ஸ்ரீலங்கா பட்டத்தை வென்ற கரோலின் ஜூரி, புஷ்பிக்கா தலையில் இருந்த கிரீடத்தை வலுக்கட்டாயமாக எடுத்து அந்த கிரீடத்தை இரண்டாம் பரிசு பெற்றவருக்கு சூட்டினார், அப்போது அரங்கில் இருந்த சிலர் முகம் சுழிக்க பலர் கரஒலியை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விருத்தினைப்பெற புஷ்பிக்கா தகுதியற்றவர் என்றும் அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதால் அவர் இந்த போட்டியில் பங்கேற்கவே தகுதியற்றவர் என்றும் கரோலின் ஜூரி கூறினார். ஆனால் தான் தனது கணவரிடம் இருந்து பிறந்து வாழ்வதாகவும் தங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை என்றும் புஷ்பிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Sri Lankan Pushpika De Silva's "Mrs. World" crown was snatched moments after she won the pageant, for being divorced. Organizers have reinstated her as the winner, after confirming that she is only separated. <a >pic.twitter.com/ztarH7CnWe</a></p>— DW News (@dwnews) <a >April 10, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இதனைத்தொடர்ந்து மேடையில் திருமதி ஸ்ரீலங்கா புஷ்பிக்கா டி சில்வா தலையில் இருந்து கிரீடத்தை பறித்ததற்காக முன்னாள் வெற்றியலார் கரோலினை போலீசார் தற்போது கைதுசெய்துள்ளனர்.