ஒரு அம்மானா இவங்கள போல இருக்கனும்னு சிலர் படங்கள் நாடகங்களை பார்த்து இன்ஷ்பயர் ஆவாங்க. அப்படியான ஒருத்தர்தான் நடிகை சுசித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் மூன்று இளைஞர்களுக்கு அம்மாவாக நடித்துக்கொண்டிருக்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் சுசித்ரா .  தன்னுடைய 4 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க  தொடங்கி விட்டார். உபேந்திராவின் தங்கையாக எ(A) என்ற படத்தில் அறிமுகமானார்.  இதனை தொடர்ந்து மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2014ல் AL விஜய் இயக்கத்தில்  வெளியான சைவம் படத்தில் நடித்திருந்தார் சுசித்ரா.






இல்லத்தரசிகளின் ஃபேவரெட்டாக இருக்கும் சுசித்ரா நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் “வீட்டில் எங்க வீட்டில் என்னுடைய அம்மா, பாட்டி என்னுடன் எப்படி நடந்துக்கொள்வார்களோ அப்படித்தான் நானும் என்னுடைய  குழந்தைகளிடம் நடந்துக்கொள்வேன் அதைத்தான் நான் சீரியலிலும் பிரதிபலிக்கிறேன்.வீட்டில் ஒரு படிக்காத தாய் இருந்தால் , அவர் குடும்ப உறுப்பினர்களால குத்தி குத்தி காட்டப்படுவாங்க. அவங்களுக்கு ஏதாவது செய்யனும் , தன்னை நிரூபிக்கனும்னு ஆசை இருக்கும் . அப்படியான ஒரு கேரக்டர்தான் பாக்கியலட்சுமி .நான் ரொம்ப அமைதியான பொண்ணுதான் ஆனால் எதாவது பிடிக்கலைனா நேரடியா சொல்லிடுவேன்.தமிழ் தெரியாமத்தான் இந்த சீரியல்ல நடிக்க வந்தேன். பெண்களுக்கு சப்போர்ட் தேவைதான். ஆனால் சிலருக்கு அது கிடைப்பதில்லை. அப்போ அவங்களே துணிச்சலோட முடிவு எடுக்கனும். பாக்கியலட்சுமி சீரியல்ல பையனுக்கும் எனக்கு வரும் சீன்லாம் நான் ரொம்ப எமோஸ்னல் ஆயிட்டு பண்ணுவேன்.” என்றார் பாக்கியா சுசித்ரா