இந்தியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர் மீது ரசிகர் ஒருவர் தண்ணீர் பாட்டிலை வீசும் வீடியோ வெளியாகியுள்ளது. 


பாக்கியலட்சுமி சீரியல்:


தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். 2020ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு தமிழ் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு உள்ளது. குடும்பத்து பெண்ணாக இருக்கும் பாக்கியலட்சுமி, ஒவ்வொரு கட்டத்தில் அவமரியாதைகளை சந்தித்திப்பதால், தனது சுயமரியாதைக்காக போராடுவதே கதையாக உள்ளது. கணவனின் மற்றொரு மனைவி பிள்ளைகள், மாமனார், மாமியார், சுயத்தொழில் என எல்லாத்தையும் சமாளிக்கும் பாக்கியலட்சுமியை இல்லத்தரசிகள் கொண்டாடி வருகின்றனர். 


வாட்டர் பாட்டில் வீச்சு:


இதேபோன்று இந்தியிலும் பாக்கியலட்சுமி என்ற சீரியல் ஒளிபரப்பட்டு வருகிறது. அதில் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல நடிகர் ஆகாஷ் சவுத்ரி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பங்கேற்க சென்ற ஆகாஷ் சவுத்ரி மீது ரசிகர்கள் செய்த அநாகரிகமான செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஆகாஷ் சவுத்ரியிடம் செல்பி எடுக்க சிலர் முயன்றுள்ளனர்.


ரசிகர்களை பார்த்த ஆகாஷ் சவுத்ரி அவர்களுடன் நின்று செல்பி எடுத்துள்ளார். எனினும், ஒரு ரசிகர்கள் நடந்து செல்லும் ஆகாஷ் சவுத்ரி மீது வாட்டர் பாட்டிலை தூக்கி எறிந்தார். தன் மீது வாட்டர் பாட்டில் பட்டதும் திரும்பி பார்த்த ஆகாஷ் சவுத்ரி எதுவும் பேசாமல் அமைதியானார். தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற ஆகாஷ் சவுத்ரி இந்தி திரையுலகில் அறியப்படும் நடிகராகவே வலம் வருகிறார். 






திட்டமிட்ட தாக்குதல்?


இந்த நிலையில் நடிகர் மீது ரசிகர் ஒருவர் வாட்டர் பாட்டில் எறிந்த சம்பவம் பார்க்கும் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த நபர் ரசிகர் இல்லை என்றும், ஆகாஷ் சவுத்ரியை வேண்டுமென தாக்கும் எண்ணுடன் அவர் நடந்து கொண்டதாகவும் பலரும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அண்மை காலமாகவே இந்தி திரையுலகில் ரசிகர்கள் நடிகர்களை தாக்கும் போக்கு பரவலாக காணப்பட்டு வருகிறது. 


கடந்த மாதம் ஜவான் படத்தின் ரிலீஸை ஒட்டி நயன்தாரா, ஷாருக்கான் மற்றும் விக்னேஷ் சிவன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்பொழுது நயன்தாராவை சூழ்ந்த ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றதால் அவரை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கியது. ரசிகர்களின் இந்த நடவடிக்கையால் நடிகர்கள் சுதந்திரமாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளதால் அதற்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க: Actor Vinayakan: சனாதனம் விவகாரம்.. உதயநிதிக்கு நடிகர் விநாயகன் ஆதரவு.. என்ன சொன்னார் பாருங்க..!