விஜய் நடித்துள்ள லியோ படத்துக்கு போட்டியாக வரும் 19ஆம் தேதி கன்னட சூப்பர் ஸ்டார், தெலுங்கு ஸ்டார் நடிக்கும் இரு படங்கள் போட்டியாக ரிலீசாக உள்ளன.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ்,  இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. கடந்த 5ஆம் தேதி வெளியான லியோ டிரெய்லர் இதுவரை 44 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படத்துள்ளது. 


ரசிகர்களிடையே லியோ படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், லியோ படத்துக்கு போட்டியாக கன்னடம் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகர்கள் நடித்துள்ள படம் ரிலீசாக உள்ளது. அந்த வகையில், தெலுங்கில் பால கிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படம் ரிலீசாக உள்ளது. பால கிருஷ்ணாவின் 108ஆவது படமாக உருவாகி இருக்கும் பகவந்த் கேசரி படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். படத்தை ஷைன்ஸ் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. 


படத்தின் டிரெய்லரில் தனது மகளுக்கு ஆர்மியில் சேர பாலகிருஷ்ணா டிரெய்னிங் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் பகவந்த் கேசரி ட்ரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதேபோல் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் நடித்துள்ள கோஸ்ட் படம் வரும் 19ஆம் தேதி ரிலீசாகியுள்ளது.


ஸ்ரீனி இயக்கியுள்ள கோஸ்ட் படத்தில் கேங்க்ஸ்டராக சிவராஜ் குமார் நடித்துள்ளார். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் நடித்திருப்பார். சில காட்சிகளே வந்து சென்றாலும் சிவராஜ்குமாரின் நடிப்பில் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தமிழில் ரஜினிக்கு சமமாக சிவராஜ் குமார் கொண்டாடப்பட்டார். இதுமட்டும் இல்லாமல் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் சிவராஜ் குமார் நடித்திருப்பாதால் அதிலும் அவரது அதிரடிகளைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


விஜய்யின் ‘லியோ’ படம் பிரம்மாண்ட வெற்றியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் கன்னடத்தில் சிவராஜ்குமாரின் கோஸ்ட் படமும், தெலுங்கில் பால கிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படமும் கன்னடம் மற்றும் தெலுங்கு மக்களிடையே வசூலில் டஃப் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க: Entertainment Headlines: பவா செல்லதுரை வெளியேற்றம்.. ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் - சினிமா ரவுண்ட் அப்!


Leo Censor Board: லியோ படத்துக்கு புது சிக்கல்! தியேட்டர் உரிமையாளர்களுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ்