சூர்யாவின் சூரரைப்போற்று ஐஎம்டிபி தரவரிசையில் அதிக ரேட்டிங் பெற்று உலக அளவில் 3 வது இடத்தினை பிடித்து சாதனை படைத்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உண்மை கதையினை மையமாக கொண்டு சூர்யாவினை வைத்து இயக்கிய திரைப்படம் தான் சூரரைப்போற்று. கிராமத்தில் பிறந்து எப்படியாவது விமானத்தினை இயக்கி விட வேண்டும் என்று துடிப்புடன் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா, எப்படி வெற்றி பெறுகிறார் என்பர் தான் கதைக்களம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இருந்து சிலப் பகுதிகளை எடுத்துக்கொண்டு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான சூரரைப்போற்று ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ள இந்த திரைப்படம் தற்போது தற்போது உலகளவில் பிரம்மாண்ட சாதனை ஒன்றினை படைத்துள்ளது.
ஆம் ஐஎம்டிபி ( IMDB ) என்ற ரேடிங் தளத்தில் உலகளவில் நல்ல படங்களுக்கு ரசிகர்கள் கருத்துத் தெரிவிப்பதன் அடிப்படையில் எந்த படம் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை கணக்கிட்டு பட்டியலிடுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் இந்த ஆண்டு நடைபெற்ற ரேடிங்கில் சூரரைப் போற்று திரைப்படம் 10க்கு 9.1 ரேட்டிங் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல தரமான படத்தினை கொடுத்துள்ளார் என சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
மேலும் இந்த ஐஎம்டிபி ரேடிங்கில் உலகளவிலான 1000 படங்களில் முதல் 60 இடங்களில் நான்கு இந்தியப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் 34 இடத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படமும், 58 வது இடத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படமும், 60 வது இடத்தில் அமீர் கான் நடித்த தங்கலும் இடம் பெற்றுள்ளது.
அஞ்சான் படத்தில் சூர்யாவிற்கு தொடங்கிய தோல்வி பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.
ஆனால் முன்னணி நடிகர்கள் எவ்வளவு தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும், ஒரே ஒரு வெற்றி படம் அனைத்தையும் மாற்றி விடும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த சூரரைப்போற்று என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. சமீபத்தில் தியேட்டர்களில் படம் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் பெரும்பாலும் ஓடிடி மூலமே படங்கள் வெளியாகி வருகிறது. இதற்கு விதை போட்டது சூறரை போற்று திரைப்படம். துவக்கத்தில் அதற்கு எதிர்ப்பும் இருந்தது. அதையெல்லாம் கடந்து தான் அத்திரைப்படம் இந்த மைல்கல் எட்டியுள்ளது.