ஆந்திர துணை முதலமைச்சரான பவன் கல்யாண் ஒருபக்கம் தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்னொரு பக்கம் தான் துணை முதலமைச்சராவதற்கு முன்பு நடிக்க ஒப்புக்கொண்ட படங்களின் படப்பிடிப்பை முடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவியது. தற்போது பவண் கல்யாண் நடித்து சுஜீத் இயக்கியுள்ள ஓஜி திரைப்படம் நேற்று செப்டம்பர் 25 திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. டிவிடி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீயா ரெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.தமன் இசையமைத்துள்ளார். ஓஜி திரைப்படத்தின் ரிலீஸின் போது பவன் கல்யாண் ரசிகர்கள் அத்துமீறிய செயல்பாடுகளில் ஈடுபட்டதால் மீது பெங்களூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது
வாள் ஏந்தி அட்ராசிட்டி செய்த ரசிகர்கள்
ஒவ்வொரு முறை பவன் கல்யாண் படம் திரையரங்கில் வெளியாகும்போது ரசிகர்கள் எல்லை மீறிய செயல்பாடுகளில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள். திரையரங்க ஸ்கிரீனை கிழிப்பது, திரையரங்கத்திற்குள் பட்டாசு வெடிப்பது என பல்வேறு வீடியோக்களை நாம் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஓஜி படத்தின் ரிலீஸின் போது பெங்களூர் சந்தியா திரையரங்கத்தில் பவன் கல்யாண் ரசிகர்கள் வாள் எடுத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அனுமதி இல்லாமல் திரையரங்க வளாகத்திற்குள் ஸ்பீக்கர்களை வைத்து டிஜே வைத்து பாடல்களை ஒலிக்கவிட்டுள்ளனர்.
பெங்களூர் போலீஸ் வழக்குப்பதிவு
இந்த தகவல் அறிந்த மடிவாலா காவல் அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று ரசிகர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தன. மேலும் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களை நீக்க கோரி ரசிகர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டன. இந்த நிகழ்வில் அத்துமீறிய பவன் கல்யாண் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் பெங்களூர் போலீஸ் .
ஓஜி முதல் நாள் வசூல்
ஓஜி திரைப்படம் உலகளவில் ரூ 167 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.