Beast OTT Release: நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இந்த திரைப்படம் தமிழக திரையரங்குகளில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் பல ஆன்லைன் விமர்சகர்களிடமிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது, இந்த விமர்சனங்கள் அதிக பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க உதவும். விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பல்வேறு வர்த்தக ஆய்வாளர்களின் கூற்றுப்படி, விஜய்-நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலை விட அவரது பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய தகவலின்படி பீஸ்ட் அதன் திரையரங்கு ஓட்டத்தை முடித்த நான்கு வாரங்களுக்குப் பிறகு Sun NXT மற்றும் Netflix தளத்தில் வெளியாக உள்ளது. இதை அடுத்து எப்போது வெளியாகும் என விசாரித்த நிலையில் விஜய் நடித்த படம் மே 13-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இன்னும்  அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் உறுதிபடுத்தப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் உள்ள போக்கு மற்றும் தகவல்கள் மூலம் படம் அன்றைய தேதியில் இரவு 12 மணிக்கு ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


தமிழகம் முழுவதும் பீஸ்ட் ஃபீவர் தொற்றிக்கொண்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். படத்துக்கான முன்பதிவு தீவிரமாக இருந்தது. பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு ஆரம்பித்த உடனேயே முடிந்துவிட்டது. எப்போது விடியும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட்டுள்ளது. பேனர்கள், தோரணங்கள், பாலாபிஷேகம், பட்டாசு என பல திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. 


இந்நிலையில், முதல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். முதல் காட்சி அப்டேடஸ் இதோ!