சேலம் மாவட்டத்தில் இன்று 3 பேர் கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1762 ஆக உள்ளது. மேலும் இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,25,608 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,27,378 ஆக உயர்வு. மாவட்டத்தில் 8 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று பாதிப்பு இல்லை. 



சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 138 தடுப்பூசி மையங்கள், 531-ஆக 26-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 30 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் இதில் கடந்த மெகா தடுப்பூசி முகாமில் 26,813 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி மையம் மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் நாள் தவிர மற்ற நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படாததால் ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். முகாமில் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 



தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பாதிப்பு:


தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக தொற்று பாதிப்பு இல்லை. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு இல்லை. மேலும் இன்று குணமடைந்து வீடு திரும்பவில்லை. மாவட்டத்தில் யாரும் சிகிச்சை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 283 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 35,908 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,191 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பாதிப்பு இல்லை.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. நோயிலிருந்து யாரும் குணமடைந்த வீடு திரும்பவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார் . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 370 ஆக உள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 59,264 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,635 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பாதிப்பு இல்லை. கொரோனா பரிசோதனை குறைந்த மக்களுக்கு மட்டுமே எடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.