பீஸ்ட் ரிலீஸ்..




தமிழகம் முழுவதும் பீஸ்ட் ஃபீவர் தொற்றிக்கொண்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். படத்துக்கான முன்பதிவு தீவிரமாக இருந்தது. பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு ஆரம்பித்த உடனேயே முடிந்துவிட்டது. எப்போது விடியும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட்டது. விஜயின் மாஸ், நெல்சனின் டார்க் காமெடி என பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தியேட்டருக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும், படத்தில் பல குறைகள் இருப்பதாகவும் விஜய் ரசிகர்களே நொந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டிய விவகாரமும் சர்ச்சையாகியுள்ளது. 


நாளை ராக்கி பாய்...




கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பெருத்த எதிர்பார்ப்புடன் கேஜிஎப் பார்ட் 2 நாளை வெளியாகவுள்ளது. இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த திரைப்படத்தில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்தது. நாளை முதல் இந்தியா முழுவதுமே ராக்கி பாய் பீவர் தொற்றிக்கொள்ளும் என யஷ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் படத்தை வரவேற்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


ரிஹானாவின் பதிவு வைரல்..




உலக அளவில் மிகவும் பிரபலமான ராப் பாடகி ரிஹானா (Rihanna), அவருடைய கணவர் ராக்கி (A$AP Rocky,) இருவரும் தங்களது முதல் குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டனர். ரிஹானா கர்ப்ப கால போட்டோஷூட்டில் (pregnancy photoshoot), தனது மகப்பேறு அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.என் உடலில் மாற்றம் ஏற்படுகிறது. என் குழந்தை வளர்கிறது. அதனால், பெரிதாக இருக்கும் என் வயிற்றுப்பகுதியை நான் மறைந்து விடப் போவதில்லை. தாயாகும் முன்பு எப்படி ஃபேசனாக உடை அணிந்தேனோ, இனியும், என் உடல் மாறுதல்களுக்கு ஏற்றவாறு ஃபேசனாக ஆடைகளைத் தேர்ந்தெடுப்பேன் " என்று கூறியுள்ளார்.


லைலா - பிரசாந்த் சந்திப்பு..




சரண் இயக்கத்தில் வெளியான 'பார்த்தேன் ரசித்தேன்' திரைப்படத்தில் நடித்த ஜோடி மீண்டும் ஒரு சந்திப்பை நிகழ்த்தியுள்ளது. அப்படத்தில் ஒரு க்யூட் ஜோடியாக பிரசாந்த் - லைலா இருப்பார்கள். அப்போதே நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரை ஜோடி.  லைலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார். தனது அன்றாட நடவடிக்கைகள், பர்சனல் வாழ்கை, தான் நடித்த படங்களில் இடம்பெற்ற கிளிப்பிங்ஸ் தொடர்பான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நண்பர் ஒருவரை சந்தித்த மகிழ்ச்சியான தருணத்தை நடிகை லைலா இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தன்னுடைய திரை ஜோடியான பிரசாந்தை சந்தித்துள்ளார் லைலா. நடிகர் பிரசாந்தை நேரில் சந்தித்த லைலா அது தொடர்பான வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.


சமந்தா மீண்டும் காதலிலா? 




அனைத்து மொழிகளிலும் படு பிஸியாக இருக்கும் சமந்தா மீண்டும் காதலை நோக்கிச் செல்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்தே வருகிறது. நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா மீண்டுமொடு காதல் அல்லது திருமண வாழ்க்கைக்குள் செல்வாரா என ரசிகர்களிடையே அன்பு கலந்த எதிர்பார்ப்பு உள்ளது. இது குறித்து பாலிவுட் லைட் என்ற சினிமா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.  அதில் குறிப்பிடப்பட்டது என்னவென்றால், 'சமந்தாவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறியது என்னவென்றால், வாழ்க்கையின் தற்போதைய சூழலில் சமந்தா மகிழ்ச்சியாகவே இருக்கிறார். அவருக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். ஆக்டீவாக இருக்கிறார். அனைத்து விஷயங்களிலும் தினம் தினம் தன்னை அவர் மெறுகேற்றிக்கொள்கிறார். அதனால் அவருக்கு காதல், திருமணம் போன்ற எண்ணங்கள் இப்போது இல்லை. பணியில் கவனத்தை செலுத்தவே அவர் விரும்புகிறார். அதற்காக அவர் காதலுக்கு எதிரானவர் அல்ல. எதிர்காலத்தில் அவர் விரும்பும் காதல் எங்கேனும் கிடைத்தால் அவர் மனமுவந்து வரவேற்பார் என்று குறிப்பிட்டுள்ளனர்.