பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் பூஜா ஹெக்டே தன்னுடைய பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். இவர் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கி ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து 2014ஆம் ஆண்டு ஒக லைலா கோசம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அடுத்து 2 வருடம் கழித்து 2016 ஆம் ஆண்டு மொஹன்ஜ தாரோ என்ற இந்தி படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. 


அடுத்தடுத்து தெலுங்கு, இந்தி என மாறி மாறி நடித்துவந்த பூஜா ஹெக்டே தற்போது 10 வருடங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் எண்ட்ரி கொடுக்கிறார். பூஜா ஹெக்டே கடந்த 2010 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூஜா. பீஸ்ட் பட வேலையை முடித்துக் கொடுத்துவிட்டார்.  இந்நிலையில்தான் அவர் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பிகினி உடை அணிந்து மெல்லிய இடையுடன் தனது போனிடைல் ஷ்டைலில் தனது முடியை சரிசெய்கிறார். அதற்கு “நீந்த போகும்போது போனி டைல் தான்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். 


 






முன்னதாக, விடுமுறைக்கு மாலத்தீவுக்குச் சென்றுள்ள நடிகை பூஜா, பிகினியில் தண்ணீருக்கு நடுவே நின்று கொண்டு, கையில் ஜூசை வைத்துக்கொண்டு மயக்கும் பார்வையில் அனைவரையும் வீழ்த்தும் வகையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்திற்கு "அசாதாரண அனுபவத்தைத் தேடும் ஒரு சாதாரண பெண்" என கேப்ஷன் போட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து மெரூன் நிற பிகினியில் குளிருக்கு சூடேத்தும் விதமாக மற்றொரு பிகினி புகைப்படத்தையும் வெளியிட்டார். 






ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ராதே ஷ்யாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திலும் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சிரஞ்சீவியின் ஆச்சார்யா திரைப்படத்திலும், ரன்வீர் சிங்கின் சர்க்கஸ் மற்றும் சல்மான் கானின் பைஜான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.