நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் தயாரித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுக்க, பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ் திரைப்படம் வெளியாகி தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டன. 


அதிகாலை 4 மணிக்கெல்லாம் பெரும்பாலான தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள், ரசிகர்கள் காட்சிகளாக திரையிடப்பட்டன. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட் தியேட்டரில், காலை 8 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கியது. காலை 5 மணிக்கெல்லாம் அங்கு திரண்ட ரசிகர்கள், அடுத்த 3 மணி நேரத்திற்கு பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும், தேங்காய் உடைத்தும், மேளதாளங்கள் இசைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.




ஒருவழியாக 8 மணிக்கு தியேட்டர் திறக்கப்பட்டு ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். டிக்கெட் பரிசோதித்து உள்ளே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பரிசோதிக்க நின்றவர்களை தள்ளிவிட்டு, ரசிகர்கள் உள்ளே புகுந்தனர். நாற்காலிக்கு வந்ததில் இருந்து, விஜய் ரசிகர்கள் ஆரவாரம் அதிகம் இருந்தது. ஒரே நேரத்தில் தியேட்டர் முழுவதிலும் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்ததால், ஒலி அளவு கட்டுப்படுத்த முடியாததாக இருந்தது. காவலர்களை வைத்து கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளும் கைகொடுக்கவில்லை. 




என்ன செய்யலாம் என்று யோசித்த தியேட்டர் நிர்வாகம், உடனே தேசிய கீதத்தை ஒளிபரப்பினர். அதுவரை ஆரவார கூச்சலில் அதிர்ந்து போன அரங்கம், தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் அப்படியே அமைதியானது. அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினர். தேசிய கீதம் இசைத்து முடியும் வரை, நிசப்தமான சூழல் நிலவியது. தேசிய கீதம் முடிந்ததும், பழைய நிலை இல்லாம், ஆரவாரம் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தது. அதன் பிறகே பீஸ்ட் படத்தை திரையிட்டது தியேட்டர். 


சில காட்சிகள் வரும் போது, அவ்வப்போது ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தார்கள். இருந்தாலும், தேசிய கீதம் இசைக்கும் முன் இருந்த ‛வேவ்’ , அதன் பின் குறைந்ததால், படம் பார்ப்பவர்களுக்கு ஏற்பட இருந்த சிரமம் கொஞ்சம் குறைந்தது. 


Beast Review: ‛பெஸ்ட் ஆர் ஒஸ்ட்...’ பீஸ்ட் என்ன மாதிரி படம்? சமரசம் இல்லாத சத்தியமான விமர்சனம் இதோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண