நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த படத்திற்கு திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெற்று சென்சார் போர்டால் நீக்கப்பட்ட காட்சிகளின் விவரம் வெளியாகியுள்ளது.


இதன்படி, நடிகர் விஜய் நடித்துள்ள கதாபாத்திரமான வீரா கதாபாத்திரம் தீவிரவாதிகளை தாக்கும் காட்சி, அமைச்சர் ஹைஜாக் செய்யப்பட்டுள்ள மாலுக்கு செல்லும் காட்சி, தீவிரவாதிகளின் நெஞ்சில் வீரா கத்தியால் குத்தும் காட்சிகள், தீவிரவாதி மாலிக்கை மாலை விட்டு வெளியே அனுப்பும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.




மேலும், விஜய் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்படும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளதாக சென்சார் அறிக்கையில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரி வீராவை பற்றி பேசும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. அமைச்சரை கைது செய்யும் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது.






படத்தில் இடம்பெற்ற ஆனா, நீ ஹோம் மினிஸ்டர் பொண்ணு, பொண்டாட்டிய இம்மிடியட்டா ரிலீஸ் பண்ணனும்னு சொல்லி கேக்குறாங்க என்ற வசனம் முதலில் ஆனா நீ ஹோம் மினிஸ்டர் பொண்ணு, பொண்டாட்டிய இம்மிடியட்டா ரிலீஸ் பண்ணனும் என்று இடம்பிடித்துள்ளது. இன்னும் சில காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் நொடிக்கணக்கில் படத்தில் இடம்பெற்றவை ஆகும். விஜய் கைது செய்யப்படும் காட்சியும், மாலிக்கை மாலில் இருந்து வீரா வெளியே அனுப்பும் காட்சியும்தான் 2.51 நிமிடங்கள் இடம்பிடித்துள்ளது. தற்போது, இந்த காட்சி விவரம் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க : Beast Twitter Review: கத்தி, துப்பாக்கியை வைத்து மெர்சல் காட்டினாரா பீஸ்ட் விஜய்? - முதல் ட்விட்டர் ரிவ்யூ இதுதான்...!


மேலும் படிக்க : Beast Review: ‛பெஸ்ட் ஆர் ஒஸ்ட்...’ பீஸ்ட் என்ன மாதிரி படம்? சமரசம் இல்லாத சத்தியமான விமர்சனம் இதோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண