நடிகை லைலா ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் அறிமுகமானார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், கார்த்திக்கின் ‘ரோஜாவனம்’ அஜித்தின் ‘தீனா’ ‘பரமசிவன்’, சூர்யாவுடன் ‘நந்தா’ ‘பிதாமகன்’, ‘உன்னை நினைத்து’, ‘மெளனம் பேசியதே’ விக்ரமின் ‘தில்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதேபோல சரண் இயக்கத்தில் வெளியான 'பார்த்தேன் ரசித்தேன்' திரைப்படத்திலும் நடித்தார்.
இப்படத்தில் ஒரு க்யூட் ஜோடியாக பிரசாந்த் - லைலா இருப்பார்கள். அப்போதே நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரை ஜோடி. லைலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார். தனது அன்றாட நடவடிக்கைகள், பர்சனல் வாழ்கை, தான் நடித்த படங்களில் இடம்பெற்ற கிளிப்பிங்ஸ் தொடர்பான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நண்பர் ஒருவரை சந்தித்த மகிழ்ச்சியான தருணத்தை நடிகை லைலா இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தன்னுடைய திரை ஜோடியான பிரசாந்தை சந்தித்துள்ளார் லைலா. நடிகர் பிரசாந்தை நேரில் சந்தித்த லைலா அது தொடர்பான வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பழைய நண்பர் என்றும், பார்த்தேன் ரசித்தேன் என்ற ஹேஸ்டேக்குகளை பதிவிட்டும் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார் லைலா.
முன்னதாக, திரைத்துறையில் இருந்து தற்காலிகமாக விலகிய லைலா, ஈரானிய தொழிலதிபர் மெஹ்தினை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இறுதியாக அஜித்தின் திருப்பதி படத்தில் நடித்த அவர், அதனைத்தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் அவர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இது தொடர்பாக ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில அவர் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் போட்டோவை வைத்து பார்க்கும் போது, கார்த்தி ராஷிகண்ணா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார்’ படத்தில் நடிக்கிறார் என்பது தெரியவருகிறது.