கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்தாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கிங்ஸ் லீ உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.


விரைவில் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும்வகையில் திரைக்குவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த அரபிக் குத்து பாடலின் பாடல் வரிகள் காதலர் தினமான இன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவை சன் பிக்சர்ஸ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வேகமாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 


இந்நிலையில் இந்தப் பாடல் தொடர்பாக ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.