காதலர் தினம் மாலை முதல் இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து. துள்ளல் இசையுடன் நடனமாடத் தூண்டும் அரபிக் குத்து இப்போது சோஷியல் மீடியா வைரல். 'ஹலமதிஹபிபோ' என ஆளாளுக்கு அதிரடியாக ஆடி சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.  பாடலும், டான்ஸும் மட்டும் வைரலாகவில்லை. பாடலை பாடிய பாடகி ஜொனிதா காந்தியும் வைரலாகிவிட்டார். தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரும் 'இவரு ஏன் ஹீரோயின் ஆகலை?' என்ற கேள்வியை பலரும் பதிவிட்டு வருகின்றனர். க்யூட்டாக பாடல் பாடிக்கொண்டே ஆட்டம் போடுகிறாரே இந்த ஜொனிதா என பலரும் ஹார்ட் விட்டு வருகின்றனர். அவருடைய இன்ஸ்டா பக்கம் போனால் பல வீடியோக்கள் க்யூட் க்யூட்டாக கொட்டிக் கிடக்கிறது. இசையும், நடனமும் என செம எனர்ஜியாக இருக்கும் ஜோனிடாவின் சில வீடியோக்களை தேடி இளைசுகள் படையெடுத்து வருகின்றனர்.






யாரு சாமி இவங்க?


டெல்லியில் பிறந்த ஜொனிதா தன்னுடைய ஏழு வயதிலேயே கனடா பறந்தார். அவரின் தந்தை பொழுதுபோக்கு இசைக்கலைஞர் என்பதால் ஜொனிதாவுக்குள் இசை எளிதாக நுழைந்தது. அழகாக பாடும் ஜொனிதாவை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார் அவரது தந்தை. சுகாதார அறிவியல் மற்றும் வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்த ஜொனிதாவுக்கு இசைதான் ஆர்வம். மேற்கத்திய பாரம்பரிய இசையில் மட்டுமன்றி, இந்துஸ்தானி இசையிலும் பட்டையைக் கிளப்பிய ஜொனிதாவை பாலிவுட் முதலில் பயன்படுத்தியது. பின்னர் ஏ ஆர் ரகுமான் மூலம் ஓ காதல் கண்மணி படத்தால் தமிழுக்குள்ளும் நுழைந்தார் ஜொனிதா.


க்யூட்டான சில பாடல்களை பாருங்க..