மலையாளத்தில் பஷில் ஜோசப் இயக்கத்தில் வெளியான 'மின்னல் முரளி' திரைப்படம் உலகளவில் உள்ள திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய அகாடமி கிரியேட்டிவ் விருதுகள் 2022ம் ஆண்டிற்கான சிறந்த இயக்குனருக்கான விருதை கைப்பற்றியுள்ளார் பஷில் ஜோசப். 


 



 


சூப்பர்மேன் கான்செப்ட் சூப்பர் :


வீக் எண்ட் பிளாக்பஸ்டர் நிறுவனத்தின் தயாரிப்பில் பஷில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், பெமினா ஜார்ஜ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜு, மம்முக்கோயா மற்றும் பலர் நடிப்பில் உருவான இப்படம் ஒரு அருமையான கான்செப்டை வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. தென்னிந்திய சினிமாவில் சூப்பர் மேன் கதைகள் அரிதாகவே வெளியாகும். ஹாலிவுட்டில் பழகி போன ஒரு விஷயத்தை நம்ம ஸ்டைலில் மிகவும் அழகான திரைக்கதையுடன் சரியான லாஜிக் பயன்படுத்தி நகர்த்தி சென்றது 'மின்னல் முரளி' திரைப்படத்தை வெற்றியின் பாதையில் நகர்த்தி சென்றுள்ளது. 


 






 


சிறந்த இயக்குனர் :


2022ம் ஆண்டிற்கான ஆசிய அகாடமி கிரியேட்டிவ் விருதுகள் நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. 16 நாடுகள் பங்கேற்ற இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது நெட்ஃபிக்ஸ் சூப்பர் ஹீரோ 'மின்னல் முரளி' படத்திற்காக பஷில் ஜோசப் கைப்பற்றியுள்ளார். தன்னுடைய அளவில்லா மகிழ்ச்சியை சோசியல் மீடியா மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பஷில் ஜோசப்.


 






 


'சிங்கப்பூரில் நடந்த ஆசிய அகாடமி கிரியேட்டிவ் 2022 இல் 16 நாடுகளில் சிறந்த இயக்குனராக அறிவிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மலையாள திரையுலகின் ஒரு அங்கமாக இருப்பதற்கும் இந்தியாவின் பிரதிநிதியாக இந்த மேடையில் இருப்பதை எண்ணியும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தயாரிப்பாளர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். நீங்கள் இல்லாமல் இந்த சூப்பர் ஹீரோவை உருவாகியிருக்க முடியாது! ' என பதிவிட்டுள்ளார் பஷில் ஜோசப்.