குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரம் பார்பி. பார்பீயின் உலகத்தை படமாக்கியுள்ளார் ஹாலிவுட் இயக்குநர் கிரெட்டா கர்விக். ரயன் காஸ்லிங் மற்றும் மார்கரெட் ராபீ ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை மிக வண்ணமயமான ஒரு படமாக எடுக்க விரும்பியிருக்கிறார் படத்தின் இயக்குநர். பார்பியின் உலகத்தை கண்முன் உருவாக்குவதற்காக இயக்குநரும் ப்ரோடக்ஷன் டிசைனர் சாரா ஆகிய இருவரும் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிங் நிற உலகம்
இந்த படத்தில் வரும் வீடுகள் அனைத்தும் பார்பி பொம்மைகளின் வீடுகள் போல வடிவமைக்கப்பட்டு அவற்றுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள், கார்கள், சாலைகளுக்கு எல்லாம் பிங்க் நிற பெயிண்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எந்த அளவிற்கு என்றால் தற்போது சர்வதேச சந்தையில் பிங் நிறப் பெயிண்ட் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு இந்தப் படத்தில் பெயிண்ட் பயன்படுத்தியுள்ளார்கள் என குற்றம் சாட்டப்படும் அளவிற்கு.
இந்தியாவின் பார்பி யார்?
பார்பீ படத்தின் மீது பெரியளவிலான எதிர்ப்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் தற்போது இணையதளத்தில் என்ன டிரெண்டாகி வருகிறது என்றால் பார்பி படத்தில் எந்த இந்திய கதாநாயகி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதே. சமந்தா , ஆலியா பட், ஐஷ்வர்யா ராய் , மற்றும் கியாரா அத்வானி ஆகியவர்கள் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். வழக்கம்போல் நம் தமிழ் ரசிகர்களுக்கு சமந்தா இந்தப் படத்தில் நடித்தால் அட்டகாசமாக இருக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.
கிரெட்டா கெர்விக்
ஹாலிவுட்டில் பெண்களின் உணர்வுகளை மிக அழகாக பதிவு செய்யும் இயக்குநர்களில் முக்கியமானவர் கிரெட்டா கெர்விக். இவர் இயக்கிய பிரான்சிஸ் ஹா இன்றுவரை ஆண் பெண் இருதரப்பினராலும் சிலாகிக்கப்படும் திரைப்படம். மேலும் லுயி மே ஆல்காட் எழுதிய லிட்டில் வுமன் என்கிற நாவலை தனது பார்வையில் புதிய கண்ணோட்டத்தில் இயக்கியிருப்பார் க்ரெட்டா. கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடித்த மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தை இயக்கினார் க்ரெட்டா.
ஒரு உறவு முறிவதை மிக அழகாக சித்தரித்திருப்பார். தற்போது பெண்களுக்கான கார்டூன்கள் என வரையறுக்கப்படும் பார்பி குறித்த கதையை எடுக்கும் க்ரெட்டா அதில் என்ன புதிதாக சொல்லப்போகிறானர் எனபதை பார்க்க மிக ஆர்வமாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.