லட்சுமிக்கு ஆபத்தில் உதவிய பாரதியைப் பார்த்து அவளின் அம்மாவான கண்ணம்மா சந்தோஷப்படுவது போன்ற ப்ரோமோ வெளியாகி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் என்றாலே ஒரு தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல்னா சொல்லவே தேவையில்லை அந்தளவிற்கு மிகப்பெரிய ரீச் ஆனது. டிஆர்பிலும் நம்பர் 1 இடத்தைத்தான் பெற்றது. சராசரி குடும்பத்தில் பிறந்த பெண், பெரிய குடும்பத்தில் அதுவும் டாக்டரை திருமணம் செய்துக்கொள்வதால் மாமியார் வெறுப்பதாகக் கதைக்களம் நகரும். அதிலும் கருப்பான பெண் கண்ணம்மா என்பதால் அவரை மாமியார் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாளடைவில் , அவளின் நல்ல மனதைப்பார்த்து மாமியார் சௌந்தர்யாவும் மனம் மாறுகிறார். ஆனால் கதையின் டிவிட்ஸாக கண்ணம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தான் காரணம் இல்லை என பாரதி மறுக்கவே கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்தது.
இந்நிலையில் தான், கடந்த வாரம் லட்சுமியின் அப்பா யார் என கண்ணம்மா கூறுவது போல ப்ரோமோ வெளியானதும் ரசிகர்கள் கண்ணம்மா சீரியலுக்கு என்ட் கார்டு போட போகுதுன்னு நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியதோடு மட்டுமில்லாமல் லட்சுமியிடம் உனது அம்மா, அப்பா எல்லோரும் கண்ணம்மா தான் என கூறிவிடுகிறார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த கண்ணம்மாவிற்கு மகிழ்ச்சியளிக்கும் விதமான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப் படுத்தியுள்ளது.
குறிப்பாக தனது தோழி ஹேமாவின் பேச்சைக்கேட்டு கண்ணம்மாவின் நடத்தையை சந்தேகிக்கிறார் டாக்டர் பாரதி. இதனால் கண்ணம்மாவின் மீது வெறுப்பைக்காட்டிய நிலையிலும், அவரின் குழந்தை லட்சுமியிடம் பாசத்தைக் காட்டும் அப்பாவாகவே திகழ்கிறார். இந்நிலையில் தான், ஹேமாவும், பாரதியும் காரில் வந்தப்போது, லட்சுமி குறுக்கே வருகிறாள். அவளைக்காப்பாற்றும் பாரத வீட்டிற்கு அழைத்துச் சென்றதோடு, ஏன் இப்படி குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறாய் என கண்ணம்மாவிடன் சண்டைப் போடுகிறார்.
இதனை அமைதியாகக் கேட்கும் கண்ணம்மா, இப்போது தான் லட்சுமிக்கு பொறுப்பான அப்பாவாக நீங்கள் நடந்து கொள்கிறீர்கள் என்றும், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறதாக சொல்கிறாள். .இதனைக் கூறியதும் பாரதி கோபத்துடன் இருப்பது போன்று ப்ரோமோ முடிவடைகிறது. இதனைப்பார்த்த ரசிகர்கள், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழிக்கு ஏற்ப பாரதி செயல்பட்டுள்ளார் எனவும், இது தான் அப்பாவின் பாசம் என கமெண்டுகளைத் தெறிக்கவிடுகின்றனர். இதோடு இனியும் எங்களால் பொறுத்திருக்க முடியாது எனவும், தயவு செய்து சீக்கிரம் யாருன்னு உண்மையை சொல்லிவிடுங்கள் எனற் கோரிக்கையும் பாரதி கண்ணம்மாவின் இயக்குநருக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.