விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல். பல சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் சீரியலான இதில் ராதிகா கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் வெயிட்டேஜ் சற்றும் குறையாமல் தாங்கி பிடிப்பது ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா தான். 


 



வில்லி இல்லை என்றாலும் ஒரு வகையில் வில்லி தான் :


பாக்கியலட்சுமி சீரியல் முதலில் ராதிகாவாக மிகவும் அமைதியான ஒரு கதாபாத்திரமாக நடித்தவர் ஜெனிபர். அவரின் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய பிறகு ஜெனிபரின் ரோலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரேஷ்மா பசுபுலெட்டி. இவரின் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியதும் அந்த கேரக்டரே முற்றிலுமாக மாறிவிட்டது.


ரேஷ்மா ராதிகாவாகவே கனகச்சிதமாக பொருந்தி விட்டார். பாக்கியலட்சுமி சீரியல் இன்று பலருக்கும் பிடித்த ஒரு சீரியலாக இருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம் ரேஷ்மா என்பதை யாராலும் மறுக்க முடியாது. சீரியல் பிரியர்களான பல பெண்களுக்கும் இவர் மீது பயங்கரமான கோபம் இருக்கிறது. பாக்கியாவின் புருஷனை இப்படி கைக்குள்ள போட்டிக்கிட்டாலே என்ற கோபம் தான் அது. அந்த அளவிற்கு கதையோடு ஒன்றி போய் விடுகிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள். அது தான் சீரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. 


 






 


போஸ்ட் வுமன் கொடுத்த போல்ட் ரிப்ளை :


ஏற்கனவே திரைத்துறையில் இருந்தாலும் ரேஷ்மா மிகவும் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான். 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா கதாபாத்திரமாக நடித்திருந்தார். புஷ்பா புருஷன் எனும் காமெடி இன்றும் மிகவும் பிரபலம். என்றுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது பல புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அதில் கவர்ச்சி புகைப்படங்களும் அடங்கும். அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. ஃபாலோவர்கள் அனைவரும் இவரின் போஸ்ட்டிற்காக காத்து இருப்பார்கள் என்றால் பாருங்கள். அவரின் கிளாமர் புகைப்படங்களுக்கு  எதிர்ப்புகளும் வருவதுண்டு. அதற்கும் மிகவும் போல்டாக கிளாமர் புகைப்படங்கள் போட்டா என்ன தப்பு.


 



இப்படி சீரியல், சோசியல் மீடியா என கலக்கி வரும் ரேஷ்மாவுக்கு ஒரு வளர்ந்த மகன் உள்ளார் பெயர் ராகுல். சமீபத்தில் அவரின் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடிய ரேஷ்மா அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். ரேஷ்மாவின் ரசிகர்கள் பலரும் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். ரேஷ்மாவுக்கு இத்தனை பெரிய மகன் உள்ளது பலருக்கும் இப்போது தான் தெரிய வந்துள்ளது.