மோகன் ஜி இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர், நடிகர் நட்டி, தேவதர்ஷினி, ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பகாசூரன். சாம் சி.எஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை அடுத்து மோகன் ஜியின் நான்காவது படமாக இப்படம் வெளியாகிறது.


தனது படங்கள் தொடர்ந்து கருத்தியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை பகாசூரன் மாற்றும் என மோகன் ஜி முன்னதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார். 


அதேபோல் பீஸ்ட், சாணி காயிதம் படங்களை அடுத்து செல்வராகவன் முழுவீச்சில் இப்படத்தில் நடிப்பில் இறங்கியுள்ள நிலையில் படம் பெரும் ஆவலை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.


இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பகாசூரன் பூர்த்தி செய்ததா, மோகன் ஜி சொன்னது போல் அவர் மீதான கலரை படம் மாற்றியதா, ட்விட்டர் தளத்தில் இணையவாசிகள் சொல்வது என்ன எனப் பார்க்கலாம்!